Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சித்திரைச் செவ்வானம் (பட விமர்சனம்)

படம்: சித்திரைச் செவ்வானம்

நடிப்பு: சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல், சுப்ரமணிய சிவா

தயாரிப்பு: ஏ.எல்.அழகப்பன், பி.மங்கையர்கரசி

இசை: சாம் சி.எஸ்.

ஒளிப்பதிவு:மனோஜ் பரமஹம்சா, கே.ஜி.வெங்கடேஷ்

இயக்கம்: ஸ்டன்ட் சில்வா

பி ஆர். ஓ: சதீஷ் (Team Aim)

ரிலீஸ் : ஜீ5 ஒ டி டி தளம்

பொள்ளாச்சி பகுதி கிராமத்து விவசாயி சமுத்திரக்கனி. மனைவி, குழந்தை யுடன் தனது வயல் பகுதியில் வசிக்கி றார். மழைக்காலத்தில் மின் மோட்டாரை நிறுத்தச் செல்லும் மனைவி ஷாக் அடித்து இறந்து விடுகிறார். தனி ஆளாக குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் சமுத்திரக்கனி. தன் மகள் டாக்டர் ஆக வேண்டும் என்று நகர் பகுதியில் உள்ள பயிற்சி வகுப்பில் சேர்த்துவிட்டு அங்கிருக்கும் ஹாஸ்டலில் தங்க வைக்கிறார். திடீரென்று மகள் காணாமல் சென்றுவிட்டாள், அவளது ஆபாச வீடியோவை யாரோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிட்டனர் என்ற தகவல் கேட்டு சமுத்திரக்கனி அதிர்ச்சி அடைகிறார். போலீஸ் குற்றவாளி களை வலைவீசி தேடுகிறது. இதற்கிடையில் மகளை இந்த கதிக்கு ஆளாக்கியவர்களை சமுத்திரக்கனி பழி வாங்க திட்டம் போட்டு செயல்படுகிறார். இதன் முடிவு என்ன என்பதை படம் விளக்குகிறது.
சமூக வலைதளத்தால் இளம் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகின் றனர். அவர்கள் எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படமாக சித்திரைச் செவ்வானம் உருவாகி இருக்கிறது
சமுத்திரக்கனி தந்தை வேடம் ஏற்றிருக் கிறார்.தாயை இழந்த மகளை அவர் சீராட்டி தாலாட்டி வளர்ப்பதும், வளர்ந்த பிறகு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தையும் மகளுக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பதும் பொறுப்புள்ள தந்தையின் கடமை என்பதை இயல்பான நடிப்பால் படம் பிடித்து காட்டுகிறார்.
தன் மகள் பூஜாவை சிலர் ஆபாச படம் எடுத்துவிட்டார்கள் என்று அறிந்ததும் பதறிப்போகும் சமுத்திரக்கனி அந்த வீடியோவை யாரெல்லாம் வைத்திருக்கிறார் களோ அவர்களைச் தேடிச் சென்று வீடியோவை அழிக்கும்படி கேட்பது உருக்கம்.
மற்றொரு புறம் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ரீமா கல்லிங்கல் தனது கம்பீர குரலில் விசாரணையை மேற் கொள்வதும் ஒரு கட்டத்தில் நகரில் நடக்கும் சில கடத்தல், கொலைகளுக்கு சமுத்திரக்கனி மீதே சந்தேகப்பட்டு அவரை கண்காணிப்பதும் விறு விறு.
சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சமுத்திரக்கனியின் மகளாக நடித்திருக்கிறார். கிராமத்து பாங்கான முகம் என்பதால் கதாபாத்திரத்துக்கு ஏகமாக பொருந்தி விடுகிறார். தந்தையுடன் அவர் செய்யும் செல்லப்பிள்ளை விளையாட்டு ரசிக்க வைக்கிறது.
தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்த பணக்கார வீட்டு பிள்ளைகளிடம் சென்று வீடியோவை அழிக்கும்படி காலில் விழுந்து கெஞ்சும்போது கண்கலங்க வைக்கிறார் பூஜா.
இப்படத்தின் கதையை இயக்குனர் விஜய் எழுதி உள்ளார். அதில் உள்ள ஜீவன் குறையாமல் இயக்கி இருக்கிறார் ஸ்டண்ட் சில்வா. பல நூறு படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்திருந்தாலும் இயக்குனர் என்ற பொறுப்பை ஏற்ற பிறகு அதில் தனது துறையை திணிக் காமல் கதாபத்திரங்களை கையாண்டிருக்கும் விதம் அவரை முழுமையான இயக்குனராக கண்முன் நிறுத்துகிறது.
சாம் சி.எஸ். இசை, மனோஜ் பரமஹாம்சா, கே.ஜி.வெங்கடேஷ் ஆகியோரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கைகொடுத்திருக் கிறது.

செக்கச் சிவந்த வானம்-பாலியல் கொலைக்கு சரியான தீர்ப்பு..

Related posts

Roommate from Today 

Jai Chandran

லைக்காவுடன் கரம் கோர்க்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்

Jai Chandran

நடிகர் கார்த்திக்கிற்கு காலில் காயம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend