Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

சதுரங்க வேட்டை 2” ஜனவரி ரிலீஸ்

திரைக்கு வருகிறது “சதுரங்க வேட்டை 2” திரைப்படம், ONSKY Technology PVT. LTD நிறுவனத்தின்   தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் வெளியிட, வருகின்ற ஜனவரி மாதம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது !

ஒரு தனி நபர், தன் மீதான நம்பிக்கையில், மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு முயற்சியைத் தொடங்கும்போது, ​​அதன் முடிவுகள் கண்டிப்பாக வெற்றியின் உச்சத்தைத் தொடுவது உறுதி, அந்த முயற்சியானது அவர் சார்ந்து இயங்கும் தொழில்துறையின் அந்தஸ்தையும் உயர்த்தும். இது ONSKY Technology PVT. LTD நிறுவனத்தின் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் மூலம் உறுதியாகியுள்ளது. மிகச்சமீபத்தில் தான் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். அவரது முதல் தயாரிப்பான “2030”, தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஃப்ளாஷ் ஃபார்வர்டு வகை திரைப்படமாக, விறுவிறுப்பான வேகத்தில் உருவாகி கொண்டிருக்கும் வேளையில், அவர் தற்போது திரைப்பட ரசிகர்களுக்கு, குறிப்பாக ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தீவிர திரைக்காதலர்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளார். ஆம், நீங்கள் நினைப்பது சரி தான். அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ள சதுரங்க வேட்டை 2 படத்தின் உரிமையை அவர் வாங்கியுள்ளார். H.வினோத் (வலிமை, நேர்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சதுரங்க வேட்டையின் இயக்குனர்) எழுதி, NV நிர்மல் குமார் (விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ புகழ்) இயக்கிய இந்தப் படத்தை, தயாரிப்பாளர் மனோபாலாவின் Picture House and Cinema city நிறுவனம் தயாரித்துள்ளது.

ONSKY Technology PVT. LTD நிறுவனர் திரு.முத்து சம்பந்தம் இது குறித்து கூறியதாவது…
“அடிப்படையில், நான் ஒரு தீவிரமான சினிமா ரசிகன், கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களையும் தவறவிடாமல் தீவிரமாகப் பார்க்கிறவன். சதுரங்க வேட்டை திரைப்படம் இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, ​​மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சி துணுக்குகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது. இருப்பினும், எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும் ஏமாற்றமடைந்தேன். நான் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியபோது, ​​உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களைத் தயாரிப்பது மட்டும் அல்லாமல், மொழியியல் தடைகள் மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் படங்களை உருவாக்க வேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன். அப்படியான ஒரு படைப்பு, ரிலீஸாகமல் இருப்பது கண்டு வேதனையுற்றேன். இறுதியில் சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனோபாலா சார், Cinema city கங்காதரன் மற்றும் படம் வெளியாவதைப் பார்க்க ஆர்வமாக இருந்த பல உன்னத உள்ளங்களுக்கு நன்றி. திரு அரவிந்த் சாமி அவர்களுக்கு அவர் கொடுக்கும் ஒத்துழைப்புக்கு கோடானு கோடி நன்றி. இப்படத்தை வெளியிடும் வாய்ப்பை வழங்கியதற்காக இப்படம் சம்மந்தப்பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பிரபலமான பழமொழி உள்ளது – சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில், சரியான விஷயம் நிகழும். சதுரங்க வேட்டை 2 படத்தில் அது நடப்பதைக் கண்டு, நான் மனமார மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, ​​பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் விமர்சனப் பாராட்டுகளையும் வெல்லும் அனைத்து கூறுகளும இப்படத்தில் இருப்பதை, என்னால் எளிதாக உணர முடிந்தது. இப்போது, ​​படத்தை வெளியிட முயற்சியில்இறுதி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ஜனவரி 2022 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இபடவெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா உடன், பிரகாஷ் ராஜ், , ராதா ரவி, நாசர், சாந்தினி, ஸ்ரீமன், மனோபாலா, குமரவேல், இ.ராமதாஸ் மற்றும் பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திர நடிகர்கள் சதுரங்க வேட்டை 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Related posts

YRF to release Tiger 3 on 11th Nov in overseas

Jai Chandran

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி ‘ நவ 18ம் தேதி முதல்

Jai Chandran

Ragini Dwivedi lead role in ‘Email’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend