Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ பட துவக்க விழா

வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் (VVS Suprem Films) சார்பில் வினோத் வி சர்மா தயாரிப்பில் உருவாகும் படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. M.V ராமச்சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப்படத்தில் முக்கியமான மூன்று முதன்மை கதாபாத்திரங்களில் ‘முருகா’ அசோக் குமார், மரகதக்காடு படத்தில் நடித்த நடிகர் அஜய். மற்றும் ஒருவர் என மூவர் நடிக்கின்றனர்.. கதாநாயகியாக சோனியா நடிக்க லொள்ளுசபா மாறன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்தின் பூஜை பிரசாத் 70 எம் எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்து கொண்டு படக்குழுவினரை கவுரவித்து வாழ்த்தினார். மேலும் இந்த நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான ஆர்.அரவிந்தராஜ்,, நடிகர் சக்தி குமார், லொள்ளு சபா மாறன், இயக்குநர் பாரதி கணேஷ், நடிகர் ரோபோ கணேஷ், விநியோகஸ்தர் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

*இந்த நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசும்போது,*

“இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத் வி சர்மா என்னிடம் சொல்லும்போது இயக்குநர் ராமச்சந்திரனின் தன்னம்பிக்கை மற்றும் கதையை நம்பித்தான் இந்த படத்தை ஆரம்பித்துள்ளேன் என்று சொன்னார். இப்போதுள்ள சூழ்நிலையில் நல்ல கதை இருந்தாலே மக்கள் வரவேற்பு கொடுத்து விடுவார்கள். இன்றைக்கு ஓப்பனிங் என்பது ஒரு நான்கைந்து ஹீரோக்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. மற்றபடி என்ன தான் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் வேறு பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் மக்களுக்கு பிடித்திருந்தால் தான் அந்த படம் வெற்றி அடைகிறது.

அன்று ஒரு படம் பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலே அது கிட்டத்தட்ட வெற்றி படம் போல தான். ஓரளவுக்கு வசூலித்தும் விடும். ஆனால் இப்போது நிலைமை மாறி உள்ளது. ஒரு முதல் படத்தின் இயக்குநராக நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுகிறோம் என்பதைவிட நம்மை நம்பிய தயாரிப்பாளரின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். அதை செய்தாலே அவர் மிகப்பெரிய ஆளாகி விடுவார். அந்த வகையில் இயக்குநர் ராமச்சந்திரன் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவார்.

என் முதல் படத்தில் நடிகர் விஜய்யிடம் சென்று கதை கூறியபோது மூன்றாவது முறை அவர் ஓகே என்று சொன்னார். அவர் அப்படி சொன்னவுடன் தான் எனக்கு மிகப்பெரிய பயம் வந்தது. நான் ஒரு அறிமுக இயக்குனர். அவர் மாஸ் ஹீரோ. நம்மை நம்பி, கதையை நம்பி நம்மிடம் ஒப்படைத்து இருக்கிறார் என்று. ஆனால் படம் முடித்து விட்டு விஜய் சார் பார்த்துவிட்டு நீங்கள் கதை சொன்னதை விட மூன்று மடங்கு நன்றாகவே எடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னார். அப்போதுதான் எனக்கு திருப்தி வந்தது. ஒரு தயாரிப்பாளர், ஒரு உதவி இயக்குநருக்கு கொடுப்பது வாய்ப்பு அல்ல வாழ்க்கை. அதை வாய்ப்பாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைக்க வேண்டும்.

இப்போதைய காலகட்டத்தில் ஒரு படத்தை முதல் நாளில் இருந்தே விமர்சனங்கள் ரொம்பவே பாதிக்கின்றனவோ என்கிற பயம் தயாரிப்பாளர்களுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால் ஒரு படத்திற்கு நல்ல விமர்சனத்தை சொல்லும்போது ஏற்றுக்கொள்ளும் உங்களுக்கு அதே நபர்கள் உங்களுக்கு எதிராக விமர்சனம் சொல்லும்போது ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிற ஒரு கேள்வியை நீதிமன்றம் கேட்டுள்ளது. சரியான கேள்விதான். அதே சமயம் விமர்சனங்கள் நாகரிகமாக, ஆரோக்கியமாக, நேர்மையாக இருக்க வேண்டும். விமர்சனம் அவதூறாக இருந்தால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும் நீதி மன்றம் கூறியுள்ளது.

முன்பெல்லாம் பத்திரிகை, டிவி விமர்சனங்களை பார்த்துவிட்டு மக்கள் படத்திற்கு சென்றார்கள். இப்போது மக்களே விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள். மக்களுக்கு பயந்து நாம் படம் எடுக்க வேண்டும். நிறைய சிறு தயாரிப்பாளர்கள் இப்படி நிறைய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய புண்ணியம். அந்த புண்ணியமே உங்களுக்கு வெற்றியாக அமையும்” என்றார்.

*தயாரிப்பாளர் வினோத் வி சர்மா பேசும்போது,*

“திரைப்படம் என்பது வெறும் கதை அல்ல. அது உணர்ச்சிகளின் சங்கமம். கனவுகளின் வெளிப்பாடு. மற்றும் பலரின் உழைப்பின் சாட்சி. எங்கள் படக்குழுவினரின் திறமை, ஆற்றல், உழைப்பு இந்த படத்திற்கு மெருகூட்டும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்திற்காக உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுடன் இந்த பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பேன் என நம்புகிறேன். நன்றி வணக்கம்” என்று கூறினார்.

*இயக்குனர் M.V.ராமச்சந்திரன் பேசும்போது,*

“இந்த படத்தை இயக்குவதற்கு, வாய்ப்பு கொடுத்த என்று சொல்ல முடியாது.. வாழ்க்கையே கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய 24 வருட போராட்டம், பல இழப்புகளுக்கு பிறகு தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் இயக்குநராக வேண்டும் என என் அம்மா உள்ளிட்ட பலர் விரும்பினார்கள். நிச்சயமாக இந்த படத்தின் மூலம் அவர்களது ஆசையை நிறைவேற்றி விடுவேன். புராண காலத்தில் சதுரங்கம் வேறு மாதிரி இருந்தது. காலப்போக்கில் இப்போது வேறு மாதிரி மாறிவிட்டது. இதை வைத்து வித்தியாசமான ஒரு கதையை உருவாக்கி இருக்கிறேன். இதற்கு எனது குருநாதர் இயக்குனர் பாரதி கணேஷ் ரொம்பவே உறுதுணையாக இருந்தார். நிறைய உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் இந்த கதையை உருவாக்கி இருக்கிறேன்” என்று கூறினார்.

*நடிகர் ‘முருகா’ அசோக் குமார் பேசும்போது,*

“தயாரிப்பாளர் வினோத் வி சர்மாவை வேறு ஒரு சந்திப்பில் இருந்து எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. அதன் பிறகு சினிமாவில் அவர் அடி எடுத்து வைப்பதாக என்னிடம் கூறியதுடன் நீங்களும் இந்த படத்தில் இருக்கிறீர்கள் என அழைத்தார். அதேபோல இயக்குநர் ராமச்சந்திரனையும் ஒரு போராடும் உதவி இயக்குனராக நான் பார்த்திருக்கிறேன். ஹைபர் லிங்க் முறையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த கதையை அவர் சொல்லும்போதே எனக்கு பிடித்து விட்டது” என்று கூறினார்.

*நடிகர் அஜய் பேசும்போது,*

“இந்த கதையை இயக்குநர் ராமச்சந்திரன் என்னிடம் ஒன்றரை மணி நேரம் சொன்னார். பவர்ஃபுல்லான கதைகளுக்கு எப்போதுமே பவர்ஃபுல்லான டைட்டில்கள் தான் தேவை. ஆரம்பத்தில் இயக்குனர் சொன்ன ஒன்று இரண்டு டைட்டில்கள் என்னை பெரிதாக ஈர்க்ககவில்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து இந்த ‘சதுரங்க வேட்டை ஆரம்பம்’ என்கிற டைட்டிலுடன் கூடிய போஸ்டரை எனக்கு அனுப்பினார். பார்த்ததுமே இந்த கதைக்கு மிகப் பொருத்தமான டைட்டில் என்கிற மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் உதவி இயக்குநராக இருக்கும் போதே அவருடைய உழைப்பு, திறமையை பார்த்து நீங்கள் நிச்சயம் இயக்குநராக மாறுவீர்கள் அப்போது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா என கேட்டேன் சொன்னபடியே அவர் இந்த படத்திற்காக என்னை அழைத்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்து விட்டார். அதே போல நல்ல கதை நல்ல தயாரிப்பாளரை தேடி செல்லும். அந்த வகையில் தயாரிப்பாளர் வினோத் வி சர்மாவுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும் என உறுதியாக சொல்வேன்” என்று கூறினார்.

*தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*

தயாரிப்பு ; வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் / வினோத் வி சர்மா

இணை தயாரிப்பு ; இந்தியன் ஜிம்கலி & PVR புருசோத் பாண்டியன்

டைரக்சன் ; எம் வி ராமச்சந்திரன்

ஒளிப்பதிவு ; டேனியல் ஜே வில்லியம்ஸ்

இசை ; பாலசுப்ரமணியம் ஜி

படத்தொகுப்பு ; ராம் சுதர்சன்

பாடலாசிரியர் ; மதுர கவி –பொத்துவில் அஸ்வின் – கானா சமீலு – கவி மகேஷ்

நடனம் பாபா பாஸ்கர்

உடையலங்காரம் ; V. மூர்த்தி

ஒப்பனை ; ராஜூ

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Related posts

Ram Charan, director Shankar, and producer Dil Raju collaborate for a big Film

Jai Chandran

விஜய் தேவரகொண்டா பட முன்னோட்டம் வெளியீடு

Jai Chandran

மும்பை மக்களை வியக்க வைத்த ராக்கிங் ஸ்டார் யஷ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend