Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அக்யூஸ்ட் (பட விமர்சனம்)

படம்: அக்யூஸ்ட்

நடிப்பு: உதயா, அஜ்மல்,  யோகி பாபு, ஜான்விகா, ஷாண்டிகா, பவன், தயா பன்னீர்செல்வம், ஸ்ரீதர், பிரபு ஶ்ரீனிவாஸ், டி சிவா , பிரபு சாலமன்,  சங்கர் பாபு, ஜெயக்குமார், தீபா சுபத்ரா, பிரபாகர், டேனி

தயாரிப்பு: ஏ எல் உதயா, தயா பன்னீர்செல்வம், எம் தங்கவேல்

இசை: நரேன் பாலகுமார்

ஒளிப்பதிவு: மருதநாயகம்

இயக்கம்: பிரபு ஶ்ரீனிவாஸ்

பிஆர்ஓ: நிகில் முருகன்

ஒரு கட்சியின் மாவட்ட செயலாளரை கொலை செய்ததாக கனக்கு (உதயா) கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்துச் செல்லப்படுகிறார். அவரை வேந்தன் ( அஜ்மல்) உள்ளிட்ட  மூன்று போலீசார்  கைவிலங்கிட்டு பஸ்சில் அழைத்துச் செல்கின்றனர். அப்போது  ரவுடி கூட்டம் பஸ்சை கவிழ்த்து கனக்கை கொல்ல முயல்கின்றனர். அவர்களிடமிருந்து கைதியை காப்பாற்றி வேந்தன் எப்படி அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார். கனக்கை ரவுடிகள் கொல்ல வருவது ஏன் என்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

உதயா ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. கனக்கு என்ற கைதி கதாபாத்திரத்தில் படம் முழுக்க நடித்திருக்கிறார். இது போன்ற வேடங்களை மம்முட்டி,  மோகன்லால் போன்றவர்கள் ஏற்று நடிப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு உதயாவுக்கு கிடைத்தது அபூர்வம் அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 

நான் தான் ஹீரோ,  ஒத்த ஆள் 50 பேரை அடிப்பேன் என்று சொல்லாமல் கைவிலங்கிட்ட  ஒரு கைதி எப்படி மோத முடியுமோ அந்தளவுக்கு ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து  உடன் நடித்த அஜ்மலுக்கு நிறைய ஆக்ஷன் காட்சிகளில் வாய்ப்பு தந்திருப்பது கதையின் மீதும் கதாபாத்திரங்களின் மீதும் குறிப்பாக இயக்குனர் மீதும் உதயா வைத்திருந்த நம்பிக்கையை காட்டுகிறது.

உதயாவுக்கு ஜோடியாக ஜான்விகா நடித்திருக்கிறார். இவர்கள் போடும் ஒரு குத்தாட்டம் ரசிகர்களை ஈர்த்துவிடும்.

கோ படத்திற்கு பிறகு அஜ்மலுக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். ஏற்கும் வேடத்தில் ஒன்றி விடுவது அஜ்மலுக்கு  கைவந்த கலை. இந்த படத்திலும் வேந்தன் என்ற கான்ஸ்டபிள் ஆக சின்சியராக நடித்திருப்பது கதைக்கு பெரிய பிளஸ்.

யோகி பாபு லாட்ஜ் ஓனராக வருகிறார். தனக்கே உரித்தான பஞ்ச் டயலாக் பேசி அடிக்கும் கமெண்ட்கள் அரங்கை  கொல்லென  சிரிக்க வைக்கிறது.

மேலும் ஷாண்டிகா, பவன், தயா பன்னீர்செல்வம், ஸ்ரீதர், பிரபு சீனிவாஸ், டி சிவா நடித்திருக்கின்றனர்.

இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ் கன்னடத்தில் ஐந்து வெற்றி படங்களை இயக்கியவர். ஆனாலும் அவர் நம்மூர்காரர். முதன்முறையாக தமிழ் படம் இயக்கியிருக்கிறார். தானொரு ஆக்ஷன் பட இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.வெறும் சண்டை காட்சிகளை மட்டும் நம்பாமல் காதல், செண்டிமெண்ட் கலந்த கலவையாக ஸ்கிரிப்ட் அமைத்திருப்பது புத்திசாலித்தனம்.

ஏ எல் உதயா, தயா பன்னீர்செல்வம், எம் தங்கவேல் தயாரித்திருக்கின்றனர்.

நரேன் பாலகுமார் இசையில் காதல் குத்து பாட்டும், பிரியாணி செய்முறை பாட்டும் தாளம் போடவைக்கிறது

ஒளிப்பதிவாளர் மருதநாயகம் கேமரா பில்டப் எதுவும் செய்யாமல் எதார்த்தமான காட்சிகளாகவே படமாக்கி இருப்பது பிளஸ்.

அக்யூஸ்ட் – ஆக்சன் சென்டிமென்ட் பிரியர்களை கவரும்.

By

ஜெயச்சந்திரன் கே

www.trendingcinemasnow.com

 

 

 

 

 

Related posts

Ravi Mohan’s Directorial Debut “An Ordinary Man” Promo Unveiled

Jai Chandran

விசித்திரன் (பட விமர்சனம்)

Jai Chandran

நடிகர் ஜெய் மிகவும் கலகலப்பான நபர் – “ட்ரிப்ள்ஸ்” நடிகர் ராஜ்குமார் !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend