Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினிக்கு பாரதிராஜா வாழ்த்து: மூன்று தலைமுறை முடிசூடா மன்னன்..

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தாதா சாகேப் விருது பெறும் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
​​சூப்பர் ஸ்டாருக்கு தாதா சாகேப் பால்கே விருது
மூன்று தலைமுறைகளின் முடிசூடா மன்னனாகத் திகழும் எனதருமை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்துக்கு “தாதா சாகேப் பால்கே விருது” கிடைத்தமைக்கு உண்மையிலேயே பெருமை கொள்கிறேன்.

கலைஞன் என்பவன் மக்களை தன் பக்கம் ஈர்க்கும் திறன் கொண்டவனாக இருப்பது முக்கியம்.

எத்தனை கால கட்டங்களைக் கடந்தாலும், தன்னை இன்னமும் உச்ச நாற்காலியில் இருத்தி வைக்க எத்துணை உழைப்பு வேண்டுமோ அத்தனை உழைப்பையும் கொடுத்து மக்களை தன் பக்கமே ஈர்த்து வைத்திருக்கும் இந்திய நாயகன், என் நண்பன், சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்திற்கு ஏற்புடைய விருதாகவே எண்ணி மகிழ்கிறேன்.

திரு. ரஜினிகாந்த் மேலும் எத்தனை உயரம் உண்டோ அத்தனை உயரத்தையும் அடைய அன்பின் வாழ்த்துகள். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். இந்திய சினிமாவின் இந்த உயரிய விருதை உரிய நேரத்தில் வழங்கிய மத்திய அரசிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Related posts

Maidaan Triumphs at the Septimius Awards

Jai Chandran

கண்ணதாசன். எம்.எஸ்.வி பிறந்தநாளில் கமல் புகழாரம்..

Jai Chandran

Actor Arya to release the First Look of AmigoGarage

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend