Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

” டைட்டில்” பட விழாவில் முதல்வருக்கு பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன் முக்கிய கோரிக்கை

நடிகர் விஜித் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ டைட்டில் ‘ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் நடைப்பெற்றது.
படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு வரவேற்றார்..

பின்பு பேசிய ஸ்டுடியோ 9. ஆர்.கே. சுரேஷ் , “ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதனையும், குறிப்பாக ஒரு சிறிய படத்தினை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல..படத்தில் நடிக்கும் நடிகர்களை அந்த படத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சி களுக்கு வர வேண்டும்” என்றார்.

மைம் கோபி பேசும்போது, “படத்தின் பெயரே டைட்டில் என்பதனால் பெயருக் )கான அர்த்தம் என்ன என்று யாரும் கேட்க முடியாது” என்றார்.

பட இயக்குனர் ரகோத்து விஜய்,  “பத்திரிகையாளர்களிடம் இந்த படத்தினை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் பேசும்போது. “என்னால முடியாது என்று நான் நினைத்த பொழுது என்னை நம்பி என்னால முடியும் என்று என்னை நம்பியவர் என் தாய். ஆறு படம் நின்னு போச்சு..இது ஏழாவது படம். நிச்சயம் வெற்றி பெறும்” என்று கூறியதோடு மட்டும் நிறுத்தாமல் அனைவருக்காகவும் தன் படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி கைதட்டல் பெற்றார்.

டத்தோ ஶ்ரீ ராதா ரவி பேசியது:

ஒரு படம் என்றால் அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்  நடிகர்கள் தங்களது சம்பளத்தை தாங்கள் ஏற்றிக்கொள்ளவில்லை ஏற்றிகொடுத்தால் வாங்கி கொள்ளாமல் இருப்பார்களா.ல்? ஒரு படத்தை காப்பாதனும்னா அது தமிழ்நாட்டு மக்களால் மட்டுமே முடியும். எல்லாரும் படத்தை திரையரங்கில் பாக்கணு, OTT யில் பாத்தா வேலைக்கு ஆகாது.  திரையரங்கம் சென்றால் படம் பார்த்து விட்டு வர வேண்டுமே தவிர, பாப்கார்ன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை  சாப்பிட்டால் கூதல் செல்வு ஆகத்தான் செய்யும்  அதை உண்ண வேண்டாம்
ஒரு பெரிய பெயர் போன தயாரிப்பு நிறுவனம் நினைத்தால் வெற்றி படம் எடுக்க முடியும் என்பதனை தாண்டி தமிழன் படம் எடுத்தால் வெற்றி பெறவேண்டும் என்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்.

கமலின் விக்ரம் விக்ரம் வெற்றிகரமாக ஒடுவது மகிழ்ச்சி. அவர் பிறவி நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.

ஸ்டன்ட் இயக்குனர் மிரட்டல் செல்வா பேசியது:

இந்த திரைப்படத்தில் விஜய் அஜித்திற்கு நிகராக சண்டை காட்சிகள் இருக்கிறது என்றார். பது என்பதனை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் ” திரையரங்கில் டிக்கெட் எடுப்ப தற்கு ஆன்லைன் வழித்தளத்தயே பயன்படுத்த வேண்டும். அதுவே ஒரு சிறந்த வழி ” என்றார்.

இயக்குனர் கே பாக்யராஜ்  பேசியது: .

ஒரு படத்தின் தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுவே மக்களிடம் ஒரு திரைப் படத்தை கொண்டு சேர்க்கும். குறிப்பாக பெண்களை ஈர்க்கும் வண்ணமே ஒரு தலைப்பு இருக்க வேண்டும் என்று அந்த காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது. எனது படத்தில் கூட நிறைய எதிர்மறை தலைப்பு வைக்கின்றேன் என பல்வேறு விதமான விமர்சனங்கள் எனக்கு எதிராக வரும். ‘ சுவரில்லா சித்திரம் ‘ என்ற படம் இது போன்ற எதிர்மறை அலைகளை மீறி வெற்றி பெற்றது. எனது அனைத்து படங்களிலும் தலைப்பு என்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும், அதே சமயத்தில் மக்களை யோசிக்க வைக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று மெனக்கெடு வேன்.
சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.. அரசு அதற்கு தனி சட்டம் இயற்றி கண்டிப்பாக சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் தர வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.

மூத்த  இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பேசியது:

இப்போதெல்லாம்  முறையாக கற்காமல் படம்  இயக்க வந்து விடுகிறார்கள். பின்னர் காணாமல் போய்விடுகிறார்கள். திரைப்படம் எடுப்பது என்பது பல்வேறு தியாகம் மற்றும் இழப்புகளை உள்ளடக்கியது. சிறுபடங்களுக்கு தியேட்டர்கள் தர சட்டம் இயற்ற வேண்டும் என்று பாக்யராஜ் கூறினார். அதை நான் ஆமோதிக் கிறேன். திரையுலகினர் எல்லோரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை வைத்தால் அவர் நிச்சயம் அதை நிறைவேற்றி தருவார்.

டைட்டில் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இதில் நடித்திருக்கும் விஜித் என்க்கு நன்கு தெரியும். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் பேசினார்.

இயக்குனர் பேரரசு, ஜீவா, ரோபோ சங்கர் மற்றும் ராஜ்கபூர் படத்தின் கதாநாயகன் விஜித்தை வாழ்த்தியதுடன்  படத்தை வெற்றி யடைய செய்ய வேண்டும் என்றனர்.

 

 

Related posts

சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி: ஆர். கே.செல்வமணி வேண்டுகோள்

Jai Chandran

இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ராம் பொத்தினேனி இணையும் படம்

Jai Chandran

Resuming Shooting of Pisasu2

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend