Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜாவின் ‘உலகம்மை’ பின்னணி இசையை கே பாக்யராஜ் வெளியிட்டார்*

தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியாக, ‘உலகம்மை’ திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா உருவாக்கியுள்ள மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசையை பிரபல இயக்குநர்-நடிகர் கே பாக்யராஜ் வெளியிட்டார்.

‘சாதி சனம்’, ‘காதல் எஃப்எம்’ மற்றும் ‘குச்சி ஐஸ்’ புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்ட ‘உலகம்மை’ திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

திருநெல்வேலி பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. ’96’ புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள ‘உலகம்மை’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், அருள்மணி, காந்தராஜ், சாமி, ஜேம்ஸ், பிரணவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் பிரகாஷ், தான் மாணவராக இருந்த காலத்திலிருந்தே சு சமுத்திரத்தின் கதைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்.

“அதுவும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, அதை திரைப்படமாக எடுக்க நான் விரும்பினேன். சமுத்திரம் அவர்கள் காலமாகிவிட்டதால், அவருடைய மனைவியிடம் இருந்து உரிமையைப் பெற்றுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

உலகம்மை என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது. மாரிமுத்து நாடார் மற்றும் பலவேச நாடார் உலகம்மை மற்றும் அவரது தந்தை மாயாண்டி நாடாரை பழிவாங்குகிறார்கள். அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதை படம் சித்தரிக்கிறது.

சமூக வாழ்வியல் திரைப்படமான உலகம்மையின் முக்கிய அம்சங்களில் இளையராஜா இசையமைத்த மூன்று பாடல்களும் பின்னணி இசையும் அடங்கும். டாக்டர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார், கே வி மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பாளராகவும், வீர சிங்கம் கலை இயக்குநராகவும் பங்காற்றியுள்ளனர்.

பாடல் வரிகளை இளையராஜா, முத்துலிங்கம், சரவணன் ஆகியோர் எழுதியுள்ளனர். ரெட் டிராகன் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் உலகம்மையை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் பிரகாஷ் இயக்கத்தில், மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வி ஜெய பிரகாஷ் தயாரித்துள்ள, சு சமுத்திரத்தின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்ட ‘உலகம்மையில், கௌரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

Related posts

தமிழை யாராலும் அழிக்க முடியாது: KK KM பட விழாவில் செல்வமணி ஆவேசம்

Jai Chandran

வித்தைக்காரன் (பட விமர்சனம்)

Jai Chandran

கன்னி’ பட விழாவில் கூல் சுரேஷைக் கலாய்த்த பேரரசு!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend