Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அசார் – யோகிபாபு – மனிஷா ஜித் நடித்துள்ள ” கடல போடா ஒரு பொண்ணு வேணும்

ஆர்.ஜி மீடியா என்ற பட நிறுவனம் சார்பில் டி.ராபின்சன் பிரமாண்டமாக தயாரித்துள்ள படத்திற்கு வித்தியாசமாகவும், காமெடியாகவும் ” கடல போடா ஒரு பொண்ணு வேணும் ” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விஜய் டிவி அசார் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். மற்றும் செந்தில், மன்சூரலிகான், பிக்பாஸ் காஜல், லொள்ளுசபா மனோகர், சுவாமிநாதன், சாய் தீனா, ஜார்ஜ்,தெனாலி, சிவசங்கர் மாஸ்டர், பவுன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஆனந்த்ராஜன் கூறியதாவது…

காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில்,  காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது.

வளர்ந்து வரும் இன்றய சூழலில் எல்லோரிடமும் செல் போன் உள்ளது. இது சில நேரங்களில் சிலருடைய வாழ்க்கைக்கு உந்துதலாக அமைகிறது. சிலருடைய வாழ்க்கைக்கு சிக்கலாகவும் அமைகிறது.
தன்னுடைய பரம்பரை சாபத்தை நீக்க போராடும் ஹீரோ அசார். தான் காதலிச்சிதான் கல்யாணம் பண்ணனும் என்கிற  எண்ணத்தோடு பல பெண்களிடம் காதலை சொல்லியும் தோல்வியே அடைகிறார். இவர் கடைசியாக ஒரு பெண்ணை பாலோ செய்து தன்னுடைய காதலை தெரிவிக்கின்றார். அவர் பதிலை  செல்போனில் தெரிவிப்பதாக கூற. சில மணி நேரத்திற்கு பின் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சிக்கல்களை அந்த செல்போன் மூலம் சந்திக்கிறார். இதிலிருந்து அவர்  மீண்டார்
காதலி பதில்  என்ன ஆனது, இறுதியில்  தனது குடுபத்தின் சாபத்தை நீக்கினாரா? என்பதை time lapse முறையில் காதல், காமெடி, சுவாரஸ்யம் என வித்யாசமான கோணங்களில் அனுகியுள்ளார் இயக்குனர் பா. ஆனந்த ராஜன்.

version 2
தலைமுறை தலைமுறையாக காதலிச்சிதான் கல்யாணம் பண்ணனும்னு முயற்சி செய்து தோல்வியை மட்டுமே தழுவிய குடும்பத்தில் இருந்து வரும் கதையின் நாயகன் அசார். தன்னுடைய அப்பா, தாத்தாவின் வழிகாட்டுதலில் காதலிச்சிதான் கல்யாணம் பண்ணணும் என்ற லட்சியத்தோடு வளர்க்க படுகிறார். தன்னுடைய தாத்தா, அப்பாவின் மரணத்திற்கு பிறகு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து batchelor வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வருகிறார். பல பெண்களோட நிராகரிப்பு க்கு பிறகு கதையின் நாயகியை தான் பணிபுரியும் துணி கடையில் சந்திக்கிறார். ஆரம்பத்தில் இருந்து ஆஸ்ரமத்தில் வாழ்ந்த கதாநாயகி தான் பெரிய ரியல் எஸ்டேடிவ்  officer ஆக வேண்டும் அதன்மூலம் ஈட்டும் வருமானத்தில் அனாதை குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணிக்கிறார். அவருக்கு உதவி செய்து காதலை வெளிப்படுத்தும் அசார் . இரவு 12 மணிக்கு பதில் சொல்வதாக கூறும் நாயகி பதிவுக்காக காத்திருக்கும் அசாரின் போன் தொலைய  அவர் இரவு பனிரெண்டு  மணிக்குள்  போனை கண்டு பிடித்தாரா? கமிட் ஆனாரா?   என்பதை காமடி, காதல், என விறுவிறுப்பாக உருவாக்கியுள்ளோம்.

 

தொழில்நுட்ப கலைஞர்கள்:

ஒளிப்பதிவு  – இனியன் J. ஹாரீஸ் ( கன்னிமாடம், பாம்பாட்டம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் )

இசை  – ஜூபின்  ( திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எடிட்டிங்  – சந்துரு
பாடல்கள் – யுகபாரதி
வசனம் – வசீகரன்
நடனம் – தீனா, ராதிகா
மக்கள் தொடர்பு  – மணவை புவன்
தயாரிப்பு  – ராபின்சன்
கதை, திரைக்கதை, இயக்கம் –  ஆனந்தராஜன்.

 

Related posts

dhanushkraja’s #Karnan Kerala Release By Mohanlal

Jai Chandran

அரண்மனை 4 (பட விமர்சனம்)

Jai Chandran

ஏற்ற தாழ்வு கிழித்தெறியும், “பேரன்பும் பெருங்கோபமும்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend