Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: முதல்வர் நேரில் அஞ்சலி

செங்கல்பட்டு மாவட்டத்தில்  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியதுடன்  குருவாகச் செயல்பட்டு வந்தார் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கருவறையில் பெண்களைப் பூஜை செய்ய அனுமதித்தும், மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட் களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தியும் ஆன்மீகப் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்.

கடந்த ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார் பங்காரு அடிகளார்.    வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் அவர் இன்று காலமானார்.

பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய.உத்தரவிட்டார். அதன்படி அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது

முன்னதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, வி.கே.சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில்  அஞ்சலி செலுத்தினர்.

காலமான பங்காரு அடிகளாருக்கு பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். அவர்களால், ‘அம்மா’ சென்று அழைக்கப்பட்டு வந்தார் பங்காரு அடிகளார். அவரது மறைவு ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையைப் பாராட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.

 

சரத்குமார் இரங்கல்:

வெளிநாட்டில் இருந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்டவரும், மரியாதைக் குரிய சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

திரளாக பெண்கள் மேல்மருவத் தூர் சென்று வழிபட காரணமாக அனைத்து நாட்களிலும் பெண்களுக்கு கோவிலில் அனுமதி யளித்து, ஆன்மீக புரட்சி செய்தவர். இந்திய அளவில் ஆன்மீகத்துறையில் தனக்கென தனி அடையாளம் பதித்தவர். அவரது இழப்பு ஆன்மீகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் பக்தர்களுக்கும், ஆன்மீக வாதிகளுக்கும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்லூரி மற்றும் கலாச்சார அறக்கட்டளையைச் சார்ந்தவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறை தொண்டில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து பிரியா விடை கண்ட அன்னாரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

ரா.சரத்குமார்
நிறுவனத் தலைவர்

 

 

Related posts

விஷால் அம்மாவிடம் திட்டு வாங்கிய ஸ்டன்ட் இயக்குனர்: லத்தி டீஸர் விழாவில் ருசிகரம்

Jai Chandran

கேரளா பெண்கள் கிரிக்கெட் தூதரான கீர்த்தி சுரேஷ்

Jai Chandran

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ஜெயராம் வாழ்த்து.,.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend