ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் திடீரென்று மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் காணாமல் போயினர். மருத்துவமனைகள் வெறிச்சோடின. இதுபற்றி விசாரித்தபோது கொரோனா தொற்று குணமாவதற்கு அனந்தய்யயா என்ற வைத்தியர் மூலிகைகள் கொண்ட லேகியம் தருவதாக தெரிய வந்தது .
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப் பட்டிணம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக வைத்தியம் பார்த்து வருகிறார்.
அவர் தரும் மருந்தை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர்.
இந்த விஷயம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி,க்கு தெரிய வந்தது. ஆனந்தய்யாவின் ஆயுர்வே மருந்தை ஆய்வு செய்யு மாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) குழுவிடம் தெரிவித்தார். முடிவு தெரியவரும் வரை மருந்து விற்பனையை நிறுத்த உத்தரவிட்டனர்.
ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்த குழு குறிப்பிட்ட மருந்தால் பக்க விளைவுகள் இல்லை, முற்றிலும் மூலிகைகளால் தயாரிக்கப் படுவதாகவும் குழு தெரிவித் தது. அதேபோல் திருப்பதி ஆயுர்வேத பல்கலைக் கழகத்திலும் அந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது.
ஆயுஷ் அமைச்சகம், ஐசிஎம்ஆர் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஆனந்தய்யா என்பவர் தயாரித்து வழங்கும் மருந்தில் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லையென்று நிரூபண மாகி இருப்பதால் ஆந்திர அரசு லேகியம் மருந்துக்கு அனுமதி அளித்துள்ளது.