எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் ( Etcetera Entertainment )நிறுவனம் சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை, 12வது தாதே சாகேப் பால்கே பட விழாவில் பெற்றுள்ளது.
மதிப்புமிக்க ‘12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா-22’ திரைப்படத்துறை யின் பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை அறிவித் துள்ளது. அதில் ஐ வி.மதியழகனின் எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை வென்றுள்ளது.
இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தயாரிப்பாளர் I.V.மதியழகன் கூறியாதவது:
எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் உரிமையாளரான நான், கடந்த 8 ஆண்டுகளில் எங்களின் வியக்கத்தக்க வளர்ச்சியின் காரணமாகவும், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், 12வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவின் மதிப்புமிக்க சிறந்த தயாரிப்பு நிறுவன விருதை வென்றோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இந்த நேரத்தில் எங்களுக்கு ஆதரவும், வழிகாட்டுதலும் வழங்கிய ஊடக நண்பர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி கூறிகொள்கிறேன். இத்தகைய பாராட்டுதல் நல்ல உள்ளடக்கம் சார்ந்த படைப்புகளை மீண்டும் தயாரிப்பதற் கான நம்பிக்கையையும், ஆற்றலையும் தருகின்றன. இது நமது தமிழ் சினிமா விற்கு மேலும் பல மரியாதைகளை பெற்று தரும் என நம்புகிறேன்.