Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

அட்லியின் ’அந்தகாரம்’ படத்துக்கு ஒடிடியில் வரவேற்பு..

பிகில் பட இயக்குநர் அட்லியும், ஒளிப்பதிவாளர் ஷாகேயும் “அந்தகாரம்” படம் பெற்றிருக்கும் பிரமாண்ட வரவேற்பில் உணர்வுகள் பொங்கி வழியும் பூரிப்பான மனநிலையில் உள்ளனர்.

அர்ஜீன் தாஸ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் “அந்தகாரம்” திரைப்படம் நவம்பர் 24, 2020 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் பாராட்டு பெற்றுள்ளது. இயக்குநர் அட்லி தமிழின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் “எந்திரன்” படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தபோது, அதே படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் எட்வின் ஷாகே. “அந்தகாரம்” படத்தை அட்லி தயாரித்திருக்க, எட்வின் ஒளிப்பதிவு செய்ததில் இருவருமே பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.

இயக்குநர், தயாரிப்பாளர் அட்லி இது குறித்து கூறியதாவது: எட்வின் ஷாகே உடன் இணைந்தது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. சமீபத்தில் தமிழில் மிகச்சிறந்த ஒளிப்பதிவை “அந்தகாரம்” படத்தின் மூலம் அவர் தந்துள்ளார். மேலும் மேலும் ஒளிப்பதிவில் அவரது அரிய சாதனைகளை காண ஆவலுடன் உள்ளேன். அவரின் வாழ்வு செழிக்க இன்னும் பல சாதனைகள் புரிய என் மனம்கனிந்த வாழ்த்துகள்.

ஒளிப்பதிவாளர் எட்வின் ஷாகே கூறியதாவது:
இயக்குநர் அட்லியுடன் இணைந்து பணிபுரிந்தது பெரு மகிழ்ச்சி. “அந்தகாரம்” படத்தை தயாரித்து வழங்கியதற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்களுக்குள் சகோதரத்துவமான நட்புணர்வு எப்போதும் உண்டு. தற்போது எங்கள் பணிகள் கவனிக்கப்படுவதும் பாராட்டப்படுவதையும் காண மிகவும் சந்தோஷமாக உள்ளது.

Related posts

கே ஜி எஃப் 2’ ட்ரைலர் நாளை வெளியீடு

Jai Chandran

Rowdy Pictures Nayanthara and Vignesh Shivan presents KAVIN starrer “OORKURUVI”

Jai Chandran

விஜய்-ராஷ்மிகா நடிக்கும் தளபதி 66 படப்பிடிப்பு தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend