அருண் விஜய் நடித்த வா, மாஞ்சா வேலு, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களை பெஃதர் ட்ச் எண்ட்ர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரித்தவர் டாக்டர் ஏ. மோகன். இவர் சிறிது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்று எதுவும் இல்லை. இந்நிலையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.
தயாரிப்பாளர் டாக்டர் ஏ மோகன். நடிகர் அருண்விஜய்யின் மாமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை ஏ.மோகன் இறுதி சடங்கு நடக்கிறது.