Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆர்யமாலா( பட விமர்சனம்)

படம்: ஆர்யமாலா

நடிப்பு: ஆர் எஸ் கார்த்திக், மனிஷா ஜித்,  எலிசபெத், சிவசங்கர், ஜேம்ஸ் யுவன், தவசி மணிமேகலை, ஜாபர் வேல்முருகன், மாரிமுத்து

தயாரிப்பு: வடலூர் ஜே சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் (ஜனா ஜாய் மூவீஸ்)

இசை: செல்வ நம்பி

ஒளிப்பதிவு: ஜெய்சங்கர் ராமலிங்கம்

இயக்கம்: ஜனா ஜாய் மூவீஸ் டீம்

பி ஆர் ஒ: KSK செல்வகுமார்.

மருதூர் கிராமத்தில் இருக்கும் அக்காள்,  தங்கை இருவரில் தங்கை இள வயதிலேயே வயதுக்கு வந்து விடுகிறாள் ஆனால் அவளது அக்கா மலர் (மனிஷா ஜித்) வயதுக்கு வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதற்காக சாமியிடம் வேண்டுகிறாள் ஆயுர்வேத மருந்து உட்கொள்கிறாள் . இந்நிலையில் அவள் கனவில் காதலன் தோன்றுகிறான். சில நாட்களில் அந்த கனவு நிஜமாகிறது  தன் ஊருக்கு ஆரியமாலா தெருக்கூத்து நடத்த வரும்  குழுவில் இருக்கும் இளங்கோ ( ஆர் எஸ் கார்த்திக்) தான் கனவில் கண்ட காதலன் என்பதை உணர்கிறாள்.. இவர்கள் காதல் நிறைவேறுகிறதா, மலர் பெண்மைக்கு உரிய பூப்பெய்துகிறாளா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது

பீச்சாங்கை என்ற படத்தில்  ஹீரோவாக நடித்த ஆர் எஸ் கார்த்திக் இப்படத்தில் கூத்து  கட்டும் கலைஞராக வேடமிட்டிருக்கிறார். காத்தவராயனாக  வேடம் அணிந்து நடிக்கும் காட்சிகள் அசல் கூத்துக் கலைஞனை கண்முன் நிறுத்துகிறது.

காத்தவராயன் உடை அணிந்து கையில் அட்டகத்தி வைத்துக்கொண்டு மைக் முன் நின்று சத்தமாக வசனம் பேசி நடித்திருக்கும் ஆர் எஸ் கார்த்திக் இதற்காக கூத்து கலைஞரிடம் பயிற்சி எடுத்திருப்பது நன்றாகவே வெளிப்படுகிறது.

மனிஷா ஜித் உடன் ஆர் எஸ் கார்த்திக் கண்களால் பேசி காதல் வலை வீசுவது இளமை துள்ளல்.  தினமும் கூத்து பார்க்க வரும் மனிஷா ஜித் திடீரென்று வராமல் போனதால் அவரை கார்த்திக் கண்களால் தேடுவது காதலின் அலைபாய்ச்சல்.

மனிஷா ஜித் தன்னால் பெண்மைக்கு உரிய பூப்பெய்த முடியவில்லையே என்று வருந்தும் காட்சிகளில் மனதை உருக்குகிறார். அதற்காக அவர் அய்யனார் சாமியிடம் சண்டை போடுவது, பின்னர் ஆவேசமாக அய்யனார் சிலையை அடிப்பது வித்தியாசம்.

மறைந்த நடிகர் மாரிமுத்து சிவசங்கர், தவசி  இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தங்கள் பங்கை நிறைவாக அளித்ததிருக் கிறார்கள்.

எலிசபத் இரண்டு மகள்களின் மீது பாசத்தைப் பொழிந்து நடித்திருக்கிறார்.  தயாரிப்பாளர் ஜேம்ஸ் யுவன் மனுஷா ஜித்தின் முறைமாமனாக வருவதுடன் ஒரு பாடல் காட்சிக்கு நன்றாக நடனமும் ஆடியிருக்கிறார்.

வடலூர் ஜே சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் (ஜனா ஜாய் மூவீஸ்) தயாரித்திருக்கிறார்கள்

இசை அமைப்பாளர் செல்வ நம்பியின் இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அதேபோல் ஜெய்சங்கர் ராமலிங்கத்தின் கேமரா உணர்வுகளை சிதறாமல் படமாக்கி இருக்கிறது

இப்படத்திற்கு இயக்குனர் யாரும் கிடையாது. ஜனா ஜாய் மூவிஸ் டீம் இப்படத்தை இயக்கி இருக்கிறது.

ஆரியமாலா – 80ஸ் காலகட்ட உருக்கமான காதல் கதை.

 

 

 

 

 

 

ப்9

Related posts

டைனோசர்ஸ் பட டிரெய்லர் விழா 

Jai Chandran

பிப்ரவரி 4 ல் வெளியாகிறது வீரமே வாகை சூடும்

Jai Chandran

“டேக் டைவர்ஷன்” நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்: இயக்குனர் பேரரசு பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend