Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பயமறியா பிரம்மை (பட விமர்சனம்)

படம்: பயமறியா பிரம்மை

நடிப்பு: ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ்

தயாரிப்பு: ஜெகதீஷ், ராகுல் கபாலி

இசை: கே

ஒளிப்பதிவு: நந்தா- வி. பிரவீண்

இயக்கம்: ராகுல் கபாலி

பிஆர்ஓ: யுவராஜ்

25 வருடத்தில் 96 கொலைகளை செய்த ஜெகதீஷ் சிறையில் அடைக்கப்படுகிறார் . அவரது வாழ்க்கையை எழுத்தாளர் கபிலன் புத்தகமாக எழுதுகிறார். அந்த புத்தகத்தை படிப்பவர்கள் ஜெகதீசாக மாறி கொலை செய்கிறார்கள். அந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன? ஜெகதீசாக மாறும் வாசகர்கள் யார்?, எழுத்தாளர் கபிலன் யார்? என்பதற்கு புதிரான விடை தருகிறது பயமறிyயா பிரம்மை.

ஹாலிவுட்டில் சில கிரைம் படங்கள் வெளிவரும் அதில் இரண்டு பேர் பேசிக்கொண்டே இருப்பார்கள், இடையிடையே ஆக்சன் காட்சிகள், மர்டர் காட்சிகள் வரும்,  பலர் புரியாமலும், சிலர் புரிந்தும் அந்த படத்தை ரசிப்பார்கள். அப்படி ஒரு பாணியில் வந்திருக்கும்  படம் தான் பயமறியா பிரம்மை.

எழுத்தாளர் கபிலனாக வினோத் சாகர் நடித்திருக்கிறார். ஜெகதீஷ் என்ற கொலையாளியாக புதுமுக நடிகர் ஜேடி நடித்திருக்கிறார்.

சிறையில் இருக்கும் ஜே டி யை நேரடியாக பேட்டி கண்டு புத்தகம் எழுத வருகிறார் கபிலன் அடுத்த காட்சியில்யிருந்து கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேற தொடங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் முதல் காட்சியே கொலையோடு ரத்தம் சொட்டச் சொட்ட தொடங்கு கிறது..

ஒவ்வொரு மர்டர் காட்சியிலும் ஹீரோ ஜேடி வருவார் என்று பார்த்தால் வெவ்வேறு நடிகர்கள் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இதை மிகவும் ஆழ்ந்து கவனித்தால்தான் அதுபுரியும் , கதையின்   போக்கும் ஓரளவுக்கு  புரியும்,, இயக்குனர் என்ன சொல்கிறார் என்பதும் புரிய வரும்.  கொஞ்சம் கோட்டை விட்டாலும் கண்ணை கட்டி காட்டில்விட்ட கதையாகத்தான் படத்தை பார்க்க  வேண்டியி ருக்கும்.  அம்புட்டுதான்  சொல்லிபுட்டே ன்.

படத்தின் தொடக்கத்திலேயே சில விளக்கத்தை இயக்குனர் தந்து விடுகிறார். அந்த விளக்கத்தை படித்தால் மட்டுமே கதையை ஓரளவுக்கு குழப்பம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும்.

ஜெகதீஷ் கதாபாத்திரத்தில் ஜே டி மட்டுமல்லாமல்  குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர் ஏன் ஒரு பெண் கதாபாத்திரம் கூட நடித்திருக்கிறது. அவரவர்கள் அந்தந்த கதாபாத்திரத்தை நச்சென செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.

புதுமுக நடிகர் ஜேடி, தானே படம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பு தந்து அதன் மூலம்ஆர்வத்தை தூண்டிவிடுகிறார். ஜேடி தனது வாழ்க்கை கதையை வினோத் திடம் கூறும் போது வசனங்களி லேயே பஞ்ச் பேசி  கவனத்தை ஈர்க்கிறார்.

இயக்குனர் ராகுல் கபாலி ஆங்கில நாவல்கள் அதிகம் படிப்பவர் போல் தெரிகிறது. அதனால் படத்தையும் ஒரு புத்தகத்தை  போலவே சேப்ட்டர் சேப்டராக படமாக்கி ஒரு கிரைம் நாவலை படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார். ஆனால் இதை எத்தனை பேர் பொறுமையாக அமர்ந்து  பார்ப்பார்கள் என்று தான் சொல்ல முடியாது.

பெரும்பாலான காட்சிகள் இருள் சூழ்ந்த நிலையிலேயே படமாக்கி  இனம் புரியாத திகிலை மனதில் பதிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நந்தா பிரவீன். அந்த சூழலை திசை மாற்றாமல் கை வலிக்காமல்  இசை அமைத்திருக்கிறார் கே.

பயமறியா பிரம்மை – புரிந்தும் புரியாமலும்..

 

 

Related posts

ராஜ்யசபை எம்பி ஆகிறார் கமல்ஹாசன்: முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு

Jai Chandran

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு கமல் இரங்கல்

Jai Chandran

லவ் டுடே 100வது நாள் வெற்றிக்கு காரணம்: பிரதீப் பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend