தனது முதல் தயாரிப்பான 99 சாங்ஸ் திரைப்படத்தின் இசையை ஆவணப்படுத்தும் டிஜிட்டல் திருவிழாவான 99 சாங்ஸ் சிறப்பு இசை நிகழ்ச்சியை ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். இது வரை காணாத வகையில் 99 சாங்ஸ் திரைப்படத்தின் பாடல்களுக்கு உயிரூட்டும் இந்த இசை அனுபவம், டிஜிட்டல் இசை நிகழ்ச்சியாக ஜியோசாவ்னின் லிவ் எனிவேர் தளத்தில் தற்போது கிடைக்கிறது.
ஏப்ரல் 16 அன்று 99 சாங்ஸ் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் பாடல்க்களை ரசிகர்கள் அனுபவிக்கும் வாய்ப்பை இந்த சிறப்பு நிகழ்ச்சி வழங்குகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிடைக்கும் இசை நிகழ்ச்சியில், 99 சாங்ஸ்-ன் பாடல்களை பாடியவர்களோடு ஆஸ்கர்-கிராமி நாயகனான ரஹ்மான் பங்கேற்றுள்ளார்.
திரைப்படத்திற்காக இசை பயிற்சி எடுத்துக்கொண்ட கதாநாயகன் எஹான் பட் மற்றும் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தியும் ரஹ்மானுடன் இணைந்து படத்தின் இசையை வழங்குகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, திரைப்படத்தின் கதைக்கும், இசைக்கும் மரியாதை செலுத்தும் வண்ணம் டிஜிட்டல் இசை அஞ்சலியாக இந்த நிகழ்ச்சியை அளிக்கின்றனர்.
இசை நிகழ்ச்சி பற்றி பேசும் ஏ ஆர் ரஹ்மான், “ஒவ்வொரு நகரத்திற்கும், ஒவ்வொரு கல்லூரிக்கும் நேரில் சென்று இப்படத்தின் பாடல்களை இசைக்க வேண்டும் என்பது முதலில் எனது திட்டமாக இருந்தது. ஆனால், தற்போதைய காலகட்டத்தை கருத்தில் கொண்டு, திறைமை வாய்ந்த பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுடன் இணைந்து டிஜிட்டல் முறையில் இந்த இசை நிகழ்ச்சியை நாங்கள் வழங்கியுள்ளோம். ஏப்ரல் 16 அன்று முகக்கவசம் அணிந்து திரையரங்குகளுக்கு சென்று 99 சாங்ஸ் திரைப்படத்தின் மீது நீங்கள் அன்பு செலுத்துவீர்கள் என நான் நம்புகிறேன்,” என்கிறார்.
பெருந்தொற்று காலத்தில் முன்மாதிரி முயற்சியான இந்த இசை நிகழ்ச்சியில், 99 சாங்ஸ்-ன் மூலம் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசை மேதை ரஹ்மான், தனது இசை மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளார்.
பென்னி தயாள், சாஷ்வத் சிங், சாஷா திருப்பதி, விஜய் யேசுதாஸ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பூர்வி கவுடிஷ், ஹரிச்சரண் மற்றும் தி சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா உள்ளிட்ட பலர் 99 சாங்ஸ் சிறப்பு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இசையின் சக்தியை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில், கதைசொல்லலை இசையுடன் கலந்து 99 சாங்ஸ் திரைப்படத்தின் பாடல்களின் ஊடாக மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு ரஹ்மான் வழங்குகிறார்.
ரஹ்மான், பாடலாசிரியர்கள் நவ்நீத் விர்க், தில்ஷத் ஷப்பீர் ஷேக், கல்பிரதா மற்றும் பாடகர்கள் உள்ளிட்டோர் பாடல்களுடன் இணைந்து கதை ஒன்றையும் சொல்கின்றனர், பாடல்கள் எவ்வாறு உருவாயின என்பதையும் விளக்குகின்றனர்.
“பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸ்-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது”, என்று கூறி 99 சாங்ஸின் இசையை அனுபவிக்க வருமாறு ரசிகர்களை ரஹ்மான் அழைக்கிறார். சாஷ்வத் சிங் பாடிய ‘ஓ ஆஷிகா’ பாடலுடன் இசை நிகழ்ச்சி தொடங்குகிறது. நிகழ்ச்சி முழுவதும் பங்கேற்ற ரஹ்மான், பியானோவில் இசைக்கிறார்.
பல்வேறு குரல்கள் மற்றும் ரஹ்மானின் பியானோ இசையின் கலவையான ‘ஓ ஆஷிகா’-வை உணர்வுப்பூர்வமான முறையில் ரசிகர்களிடம் சாஷ்வத் சிங் கொண்டு சேர்க்கிறார். பாடலாசிரியர் விர்க் கூறியவாறு 99 சாங்ஸ் திரைப்படத்தின் உணர்வை இப்பாடல் பிரதிபலிக்கிறது. தன்னலமற்றத்தன்மை மற்றும் மேம்பட்ட உலகத்திற்கான பிரார்த்தனையாக இப்பாடல் விளங்குகிறது. “நாம் சொல்ல விரும்பும் அனைத்தையும் இந்த பாடல் கூறுகிறது. திரைப்படத்தின் அடிநாதமாக இது விளங்குகிறது,” என்று ரஹ்மான் கூறியதை விர்க் நினைவு கூர்ந்தார்.
மேடையேறிய 99 சாங்ஸ் திரைப்படத்தின் இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி, படத்தை உருவாக்குவதனுடனான தன்னுடைய உறவு 99 சாங்ஸ்-ன் மூலம் எவ்வாறு மாறியது என்பது குறித்து விளக்கினார்.
இசைக்கலைஞரான விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி (ஸ்கிரைப் எனும் மும்பை குழுவில் முன்னணி கலைஞர் ஆவார்), ஒரு படைப்பாளியாக எவ்வாறு தன்னை இப்படம் மேம்படுத்தியது என்பது குறித்து பகிர்ந்தார். “என்னை சிறப்பானவனாக இத்திரைப்படத்தின் மூலம் நீங்கள் மாற்றினீர்கள்,” என்று ரஹ்மானிடம் அவர் கூறினார். 99 சாங்ஸ்-ன் உருவாக்கத்தில் இருந்த சவால்கள் அவர்கள் இருவரையும் படைப்பாளிகளாக எவ்வாறு மாற்றியது என்பது குறித்து ரஹ்மான் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து, 99 சாங்ஸ் திரைப்படத்தின் முக்கியமான காதல் பாடலான ‘சோஃபியா’ இசைக்கப்பட்டது. கார்ல் ஃபெர்னாண்டஸின் கிடாருடன் இணைந்து சிங் மற்றும் ஜோஷ்வா சத்யா ஆகியோர் ‘சோஃபியா’வை வழங்கினர். பின்னர் ‘ஜ்வாலாமுகியின்’ எரிமலை குரலான பூர்வி கவுடிஷ் இதயத்தை நொறுக்கும் பாடலை ரசிகர்களுக்காக வழங்கினார். பாடலாசிரியர் விர்க் கூறியவாறு, “காதல் என்பது அன்பு மற்றும் வலி பற்றியது. அது தான் ஜ்வாலாமுகி எனும் எரிமலை”.
இதையடுத்து ‘டெரி நாசர்’ பாடலை சிங் பாடினார். “காதலரிடம் இருந்து பிரியும் வலியை குறித்த பாடலிது,” என்று கவிஞர் ஷேக் கூறினார். சிங்கின் மென்மையான குரலுக்கு சாய் ஷ்ராவணமின் தட்டிக்கொடுக்கும் தபலா மற்றும் நவீன் குமாரின் மயங்க வைக்கும் புல்லாங்குழல் வலு சேர்த்தன. “எளிமையான மெல்லிசையுடன் தொடங்கி, சிக்கலான இசைக்கு சென்று, மறுபடியும் எளிமைக்கு திரும்பும் ஒருவரும் பயணம் இது,” என்று ரஹ்மான் கூறினார்.
‘டெரி நாசர்’-ஐ தொடர்ந்து 99 சாங்ஸ்-ன் தாலாட்டான ‘ஓ மேரா சந்த்’ மற்றும் ஆன்மிகப் பாடலான ‘சாய் ஷிர்டி சாய்’ (பேலா ஷிண்டேவால்) ரசிகர்களின் இதயத்தை தொடும் வண்ணம் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ‘சோஜா சோஜா’ பாடலை பாட வருமாறு பாடகர் சாஷா திருப்பதியை ரஹ்மான் அழைத்தார். லிசா மற்றும் ரமீத்தா வி-யின் பிராஸ் பங்களிப்பு இப்பாடலுக்கு வலு சேர்த்தது.
99 சாங்ஸ் சிறப்பு இசை நிகழ்ச்சி சிங் பாடிய ‘நயி நயி’ மூலம் நிறைவடைந்தது. இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி (தனது கிடாருடன்) மற்றும் எஹான் பட் ஆகியோர் சிங்குடன் மேடையில் இணைந்து இப்பாடலை வழங்கினர். அவர்களுடன் சேர்ந்து உற்சாகமூட்டும் வகையில் ரஹ்மானும் ‘நயி நயி’ பாடலுக்கு சிறப்பு சேர்த்தார்.
99 சாங்ஸ் சிறப்பு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்
பாடகர்கள்: பேலா ஷிண்டே, சாஷா திருப்பதி, பூர்வி கவுடிஷ், பென்னி தயாள், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சர்தக் கல்யாணி, ஷாஷ்வத் சிங், ரக்ஷிதா சுரேஷ், விஜய் யேசுதாஸ், அபய் ஜோத்புர்கர்.
இசைக்குழு:
டிரம்ஸ் – டேவிட் ஜோசப்
பெர்குஷன் – யாஷ் பாதக்
கீபோர்டு – கார்த்திக் தேவராஜ் & நகுல் அபயங்கர்
பாஸ் கிடார் – கார்ல் ஃபெர்னாண்டஸ்
கிடார் – ஜோஷ்வா சத்யா
தபலா – சாய் ஷிரவணம்
புல்லாங்குழல் – நவீன் குமார்
கடம் – கார்த்திக்
சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா – ஆதித்யநாராயணன் ஷங்கர், அங்கட் சிங், தீப்தி ரகு, திருஷ்டி டாண்டேல், நூர் பாட்டியா, ராஜ்நரேந்திரன் ராஜகோபாலன், ரமீத்தா வி, ரித்திமான் தத்தா, ரிஜுல் சக்ரபொர்த்தி, ஷிவம் காரட்வால், சினேஹா சைமன், வன்ஷிகா அரோரா
கோரஸ் – ஆதித்யநாராயணன் ஷங்கர்,
அங்கட் சிங்,
தீப்தி ரகு,
திருஷ்டி டாண்டேல்,
நூர் பாட்டியா,
ராஜ்நரேந்திரன் ராஜகோபாலன்,
ரமீத்தா வி,
ரித்திமான் தத்தா,
ரிஜுல் சக்ரபொர்த்தி,
ஷிவம் காரட்வால்,
சினேஹா சைமன்,
வன்ஷிகா அரோரா
மாட்யூலர் – தாமினி சௌஹான்
பிராஸ் – லிசா & ரமீத்தா
வயலின் – விக்னேஷ் யூ, நந்தினி ஏ, பாலாஜி ஏ, விக்னேஷ் எஸ்
வயோலா – எபினேசர் ஞான்ராஜ் எம், தினேஷ் ஏ, ஹரிஷ் குமார் கே, ஹிரித்திக் ரோஷன் ஜி
செல்லோ – வைஜெயந்தி ஆர், தீபா எஸ், பாலாஜி எம், முகமது இஸ்மாயில் எஸ்
டபுள் பாஸ் – அனிஷ் ஃபிராங்க்ளின் வி, டேவிட் கே
கண்டக்டர் – அனுபம் ராய்