தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கடைசி விவசாயி படம் பற்றி கூறியதாவது:
விவசாயம் குறித்து இவ்வளவு யதார்த்தமாக வேறொரு திரைப்படம் சித்தரித்து இருக்குமா என்பது சந்தேகம்தான். கதாநாயகராக உண்மையான விவசாயி மாயாண்டி படத்தில் மட்டுமல்ல படத்தை பார்த்த அனைவரின் நெஞ்சங்களிலும் வாழ்கிறார் .பயிர் செய்வதில் உள்ள அத்தனை அம்சங்களையும் அக்கு வேறு ஆணிவேராக பளிச்சென்று வெளிப்படுத்தியுள்ள இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு பாராட்டுக்கள். விவசாயிகள் மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய படம் இது. அனைவரும் அவசியம் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தை பார்த்து விடுங்கள்.நாங்கள் நேற்று பார்த்தோம்.