Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அனோமி (பட விமர்சனம் )

அனோமி (பட விமர்சனம் )

படம்: அனோமி

நடிப்பு : பாவனா, ரகுமான்,
ஷெபின் பென்சன், விஷ்ணு அகஸ்தியா, பினு பாப்பு, அர்ஜுன் லால், அபிஷேக் பதக்,

தயாரிப்பு : குமார் மங்கத் பகத், பாவனா, ஆதித் பிரசன்ன குமார்

இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்

ஒளிப்பதிவு: சுஜித் ஷாரங்

இயக்கம்: ரியாஸ் மரத்

பிஆர்ஓ : ஸ்ரீ வெங்கடேஷ்

கார் விபத்தில் பெற்றோரை இழந்த சாரா (பாவனா) தனது தம்பி மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். திடீரென்று தனது தம்பியை காணவில்லை என்று சாரா போலீசில் புகார் தருகிறார். ஒரு கட்டத்தில் இறந்ததாக தகவல் வருகிறது. தன் தம்பியை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்று எண்ணும் சாரா தன் தம்பியை கொன்றது யார் என்று தேட ஆரம்பிக்கிறார். போலீஸும் ஒருபக்கம் தேடுகிறது. கிளைமாக்ஸ் எதிர்பாராத ஷாக் ஆக முடிகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் பக்கம் தலைகாட்டியிருக்கிறார் பாவனா. மன உளைச்சலில் தனது தம்பி தவிப்பதையே பொறுத்துக்கொள்ள முடியாமல் கவலை அடையும் பாவனா ஒரு கட்டத்தில் அவரை காணவில்லை, யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்று அறியும்போது கொலையாளி யார் எனத் தேடி பாவனா பரபரப்பது கதையை வேகமாக நகரத்துகிறது.

மரணத்துக்கு பின்னால் நடப்பது என்ன என்பதை ஆராய ஒரு டீம் நடத்தும் ஆராச்சி பற்றிய கதையாக படத்தின் கிளைமாக்ஸ் நகரம்போது அரங்கு ஷாக் ஆகிறது.

ரகுமான் போலீஸ் அதிகாரியாக வருகிறார். கிளைமாக்ஸ் நெருக்கத்தில் ஆக்ஷன் அதிரடி காட்டுகிறார்.

படத்தை குமார் மங்கத் பகத், பாவனா, ஆதித் பிரசன்ன குமார் தயாரித்திருக்கின்றனர்.

ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசை காட்சிகளை வேகப்படுத்த நீலம் படர்ந்த ஹாலிவுட் கலர்டோனில் காட்சிகளை படமாக்கியி ருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் ஷாரங்

படத்தின் டைரக்டர் யார் என்று ஒன்றுக்கு இரண்டு.முறை கேட்க வைக்கிறார் ரியாஸ் மரத்.

அனோமி – டைட்டில் மட்டுமல்ல கதையும் வித்தியாசம்.

Review By
K. Jayachandhiran
trending cinemas now. com

Related posts

Madras HC rules in 2D Entertainment’s favour

Jai Chandran

The Lip Balm Company celebrates its first birthday with Nayanthara

Jai Chandran

Yash shares a glimpse into the vibe of ‘Toxic: A Fairy Tale for Grown-ups “

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend