இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகும் ‘அன்புசெல்வன்’ படத்தின் முதல் பார்வை விவகாரம் குறித்த விளக்கம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும், தனது படைப்புகள் மூலம் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசி வருபவருமான பா.இரஞ்சித் அவர்கள், வளரும் கலைஞர்களை ஊக்குவிப்பதில் என்றுமே தவறியதில்லை. அந்த வகையில், வளரும் மக்கள் தொடர்பாளர்களான சுரேஷ் சுகு மற்றும் தர்மதுரை ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் பணியாற்றும் ‘அன்புசெல்வன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ஆனால், அப்படக்குழுவினருக்கு இடையே உள்ள சில பிரச்சனைகள் காரணமாக, இயக்குநர் கெளதம் மேனன் ஒரு அதிர்ச்சியான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் கெளதம் மேனனின் டிவிட்டர் பதிவு குறித்து, இயக்குநர் பா.இரஞ்சித்திடம் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். வளரும் கலைஞர்களுக்கு உதவும் நோக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் செய்த இந்த செயல் தற்போது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பா.இரஞ்சித் அவர்களுக்கும் இதற்கும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம், இந்தப் படத்தின் PR பணிகளைக் கையாளும் சுரேஷ் மற்றும் தர்மதுரை ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் ஃபர்ஸ்ட் லுக்கை அவர் வெளியிட்டார்.
எனவே, இனி அன்புசெல்வன் பர்ஸ்ட் லுக் விவகாரம் தொடர்பாக, இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களது பெயரை சேர்க்க வேண்டாம், என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம். அதே சமயம், வளர்ந்து வரும் எங்களுக்கு கைகொடுக்க நினைத்து உதவிய இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு எங்களால் இப்படி ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டதற்காக, நாங்களும், அன்புசெல்வன் படக்குழுவினரும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
செவண்டி எம்எம் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் எம்.மகேஷ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பார் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கவுதம் வாசுதேவ் மேனன் சாரின் எபிசோடுகள் அடங்கிய இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.