Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரசியல் தலைவர்களுடன் கார்த்தி போஸ்டர் அச்சடிக்க கூடாது: மன்றம் எச்சரிக்கை

அகில இந்திய கார்த்தி ரசிகர் மன்ற  தலைவர் ஆ.பரமு, . செயலாளர் இரா.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தலைமை நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்!

வரும் மே-25ம் தேதி கார்த்தி அண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரத்ததானம், அன்னதானம், கண்தானம், நீர்மோர் பந்தல்கள், குடிதண்ணீர் பந்தல்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், மாணவர்களுக்கு நோட்டு,புத்தகம், பைகள் வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.

அதை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்டுவதும், முறையான முன் அனுமதி பெற்று விளம்பரங்கள் செய்வதும் ஒவ்வொரு வருடமும் நடந்துவரும் நிகழ்வுகள் ஆகும். இத்தகைய செயல்கள் யார் மனதையும் புண்படுத்தாத வகையிலும், கார்த்தி அண்ணன் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காத வகையிலும் இருக்கவேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

நேற்று மதுரை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் இரண்டு மாபெரும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் கார்த்தி அண்ணன் இருப்பது போல டிசைன் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து விளக்கம் கேட்டபோது “கார்த்தி அண்ணன் அவர்கள் மேல் இருந்த அன்பின் காரணமாக இவ்வாறு செய்துவிட்டதாகவும், இனிமேல் இவ்வாறு நடக்க மாட்டோம்” என்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக போஸ்டர்கள், பேனர்கள் டிசைன் செய்யுபோது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், அந்த போஸ்டர்களில் எந்தவிதமான அரசியல், சாதி, மத, இன அடையாளங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்றும்; யாருக்கும் எந்தவித மன வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தாத வகையில் போஸ்டர் டிசைன்கள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அறிவிப்பை மீறி நடக்கும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி!

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

 

 

 

Related posts

ஊர்வசி ரவுடலாவுடன் மனாலியில் சரவணன்..

Jai Chandran

Aranmanai3 – Only 4 days to go ..

Jai Chandran

வெற்றி நடிக்கும் ‘மெமரீஸ்’ படத்தின் டீசர் வெளியானது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend