Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் விஜயிடம் விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா வழக்கால் பரபரப்பு

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்களையும் வழங்கி இருக்கிறார். சுமார் 50,000க்கும் மேற்பட்ட விருப்பு மனுக்களை கட்சி உறுப்பினர்கள் வாங்கிச் சென்ற நிலையில் வெறும் ஐந்தாயிரம் மனுக்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்து கட்சியில் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்குக் காரணம் விருப்ப மனு விலை நூறு ரூபாய் மட்டுமே என்பதால் பலரும் அதனை சினிமா டிக்கெட் போல் வாங்கி சென்று விட்டார்கள். ஆனால் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் பத்தாயிரம் உள்ளிட்ட குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று விதிகளில் குறிப்பிடப்பட்டிருந்ததால் பலரும் மனுக்களை தாக்கல் செய்யாமல் விட்டுவிட்டனர். விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களில் டெபாசிட் தொகை காசோலை எதுவும் இணைக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

விரைவில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இதனை கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களது ஆர்வத்தில் அதிர்ச்சி உண்டாக்கும் வகையில் நேற்று ஒரு ஷாக் தகவல் வெளியானது.

நடிகர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மனதில்,’ விஜய்யை கடந்த நான்கு வருடமாக நான் பிரிந்து இருக்கிறேன், என் குழந்தைகளையும் அவர் பார்க்க மறுக்கிறார், இன்னொரு நடிகையுடன் அவர் உறவில் இருக்கிறார். அது பற்றி கேட்டபோது என்னை தாக்கி துன்புறுத்தி தனிமைப்படுத்தி வைத்திருந்தார். பொருளாதார ரீதியில் பணம் எதுவும் தராமல் தவிக்க விட்டார். மனநிலை பாதித்தவர் போல் என்னிடம் நடந்து கொண்டதுடன் தன்னை விட்டு பிரிந்து செல்லும்படி அவர் கூறினார்
நடிகையுடன் அவர் உறவில் இருப்பது உண்மைதான். என்னை வெறுப்பேற்றுவதற்காக அந்த நடிகையுடன் வெளிநாடு சென்று புகைப்படங்களை இணையதளங்களில் பகிரங்கமாக பகிர்ந்தார். அதன் மூலம் என்னையும் குழந்தைகளையும் விஜய் அவமானப்படுத்தினார். இந்த தகவலை அவர் மறுத்தால் அவர் எந்த நடிகையுடன் உறவில் இருக்கிறார் என்ற ஆதாரத்தை நான் வெளியிடுவேன் அதனை கோர்ட்டில் சமர்ப்பிப்பேன் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை விஜய் மீது கூறி அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தார் சங்கீதா.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கும் நீதிமன்றம் வருகிற ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி விஜயை கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருக்கிறது..

Related posts

ராஜா இசையில் ஸ்ரீகாந்த் நடிக்கும் தினசரி

Jai Chandran

திராவிட நாடு அரசியல் பேச வரும் பராரி: புது இயக்குனர் அதிரடி என்ட்ரி

Jai Chandran

ராமின் “பறந்து போ” விழாவில் மிஷ்கின் பரபரப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend