Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தமிழ் உட்பட 3 மொழியில் வெளியான திரில்லர் ’வி’

மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கியத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இணைந்து நடித்துள்ள படம் வி.

நானி மற்றும் சுதீர் பாபு நடித்த தெலுங்கு த்ரில்லர் ’வி’, பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பை பெற்றுள்ளது. தனது 25- வது படத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி போலீஸ் கதாபாத்திரத்தில் சுதீர் பாபு வுடன் இணைந்து அதிரடியான சேஸிங்க் காட்சிகளில் மிரட்டியுள்ளதை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். தற்போது அமேசான் பிரைம் வீடியோ தமிழ், மலையாளம் மற்றும் கன்னட ஆடியோக்களுடன் படத்தை வெளியிட் டுள்ளது. அதிரடி-த்ரில்லர் இப்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீம் செய்ய கிடைக் கிறது.
இதுபற்றி நடிகர் நானி பேசும்போது, ’இது ரசிகர்களுக்கு நாங்கள் அளிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி. இந்த படத்தை நாங்கள் ரசித்து உருவாக்கியது போலவே ரசிகர் களும் இதை அனுபவித்து பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். என்றார்.
” எப்போதுமே வி என் மனதிற்கு நெருக் கமான புராஜெக்டாக இருக்கும் மற்றும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அதிகமாக இருக்கிறது. தெலுங்கு பார்வை யாளர்கள் எங்களை தங்களது அன்பினால் திக்குமுக்காட வைத்துவிட்டனர். மேலும் இந்த ரசிகர் வட்டத்தை அதிகமாக்க படத்தை தமிழ், கன்னடம் மற்றும் மலை யாள மொழிகளில் டப் செய்து வெளியி டுவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. முடிந்தவரை நிறைய மக்களை இந்த அதிரடி திரைப்படம் அவர்களின் வீட்டிற்கே சென்று மகிழ்விக்கும் என நம்புகிறேன் என்று மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி கூறினார்.

Related posts

Allu Arjun’s Pushpa2 Release Date Announced

Jai Chandran

FIR – Reservations OPEN

Jai Chandran

RedGiant Movies Release Vishnu Vishal FIR

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend