திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பால சுப்பிர மணியம் கடந்த மாதம் தொடக்கத் தில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் உடல்நிலை மோசமாகி சுயநினைவு இழந்தார். இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி களின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை கூட்டுபிரார்த்தனை அவரை மீட்டுகொண்டு வந்திருக்கிறது. அவரைப் பற்றி திங்கட்கிழமை ஒரு நல்ல செய்தி சொல்வதாக மகன் சரண் கூறியிருந்தார். இன்று திங்கட்கிழமை மகிழ்ச்சி செய்தி யாக எஸ்பிபிக்கு கொரோனா தொற்று நெகடிவ் ஆகி இருப்பதாக கூறி உள்ளார்.
எஸ்பிபி சரண் இன்று மாலை வெளியிட் டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
என் அப்பா எஸ்பிபிக்கு வெண்ட்டி லேட்டர் இன்று அகற்றப்படும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் இன்னும் சில நாட்கள் அவருக்கு அந்த சிகிச்சை தொடர் கிறது. மகிழ்ச்சியான விஷயம் என்ன வென்றால் அப்பாவுக்கு கொரோனா தொற்று நெகடிவ் (கோவிட் 19 நெகடிவ்) ஆகி இருக்கிறது. இதற்கு முன் நெகடிவா பாசிடிவா என்பது பிரச்னை இல்லை நுரையீரல் சீராக வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருந்தேன், தற்போது நுரையீரல் விரைந்து குணம் ஆகி வருகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் எனது அம்மா, அப்பா திருமண நாள் மருத்துவமனையில் கொண்டாடினோம். அப்பா தற்போது ஐபேடில் கிரிக்கெட், டென்னிஸ் பார்த்து ரசிக்கிறார். ஐபிஎல் சீசன் தொடங்கு வதிலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் மலர்ச்சியுடன் இருக்கிறார். திட்டமிட்ட படி பிசியோதெரபியும் தரப்படுகிறது. உங்களுடைய அன்பு ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சரண் தெரிவித்திருக்கிறார்.
https://drive.google.com/file/d/1l7UgKrkr3gHCiZmj935lYYyMpwRK06IP/view?usp=drivesdk