நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் மயில்சாமி. மேடைகளில் மிமிக்கிரி செய்து வந்தவர் பின்னாளில் 1984m ஆண்டு முதல் திரைப்படங்களி லும், டி வி தொடர்களிலும் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக் காரன், தில் உள்ளிட்ட 200 படங்களுக்கு மேல் நடித்திருக் கிறார்..இவர் எம் ஜி ஆரின தீவிர ரசிகர் ஆவார்.
மயில்சாமி இன்று காலை (பிப்ரவரி 19)திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த மயில்சாமிக்கு 57 வயது ஆகிறது.
சிவராத்ரி நாளான நேற்று சிவபக்தரான மயில்சாமி கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடந்த டிரம்ஸ் சிவமணி இசை நிகழ்ச்சி யில் கலந்துகொண்டார். தொடர்ந்து கண்விழித்து அங்கு நடந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். கோயிலில் பாடலும் பாடினார். அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பிய அவர் பசிப்பதாக கூற அவருக்கு சாப்பிட இட்லி தந்தனர். அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மயில்சாமி மாரடைப்பில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , நடிகர் சத்யராஜ், ஆர்.கே.செல்வமண நேரில் வந்து மயில்சாமி உடலுக்கு மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் நடிகர் கார்த்தி, நடிகர் சத்யராஜ், ஆர்.கே.செல்வ மணிடி, நடிகர் மனோபாலா உள்ளிட்ட ஏராளமானவர்கள் மயில்சாமி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
மயில்சாமி மறைவுக்கு தென்னிந் திய நடிகர் சங்கம் சார்பில் சங்க தலைவர் நாசர் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:
அகன்ற வாய் சிரிப்புடனும்,
ஸ்படிகமான மனதுடனும்,
யாருக்கும் தீங்கு நினையாத எல்லோருக்கும் உழைத்தவராய், நண்பராய், தோழனாய், நெஞ்சில் பட்டதை நேர்படப் பேசுபவராய், பறந்தும் திரிந்தும் வந்த எங்கள் அன்பு மயில்சாமி அவர்கள் நம்மை விட்டு பிரிந்ததை எண்ணி தமிழ் திரையுலகம் விக்கித்து நிற்கின்றது.
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரில் ஒருவரான, மயில் சாமி அவர்கள் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் ஆவார். இவர் தமிழில் 100கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருடைய இழப்பு தமிழ் திரையுலகில் ஒரு மாபெரும் இழப்பு.
அவருடைய மறைவு திரைப்படத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் திரைப்பட உலகினருக்கும், ரசிகர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
இவ்வாறு நாசர் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்:
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச் சுவையாகப்பேசும் ஆற்றல் படைத்தவர், தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ் நாடு முழுவதும் அறிமுகமானவர். “காமெடி டைம்” நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவரா கவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர். முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி களில் தன்னு டைய கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்யக்கூடிய வர்.
திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத் தினருக்கும், திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்க லையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்
தெலங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்:
நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டிய வர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார்.
மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தின ருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித் துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் ரஜினிகாந்த் மயில் சாமி உடலுக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அவர் கூறும்போது “மயில்சாமி சிறந்த நடிகர். எனது நீண்ட கால நண்பர். கேளம்பாக்கத்தில் உள்ள சிவனுக்கு என் கையால் பாலா பிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அவரது கடைசி ஆடையை நிறைவேற்றுவேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
:உதயநிதி ஸ்டாலின், (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்):
அண்ணன் மயில்சாமி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக் கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண் டவர். ரசிகர்களின் அன்பைப்பெற்ற அண்ணன் அவர்கள் என்றென்றும் நினைவு கூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும், ஆறுத லையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தேமுதிக தலைவர் விஜய காந்த்:
“நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேத னையும் அடைந்தேன். பழகுவதற்கு இனிமை யானவர், அனைவ ருக்கும் உதவும் குணம் கொண்டவர், அவரது இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:
நகைச்சுவை நடிப்பில் தனக் கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப் படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் கூறும்போது, எனது நல்ல நண்பர் மயில்சாமி. புரட்சி தலைவரின் ரசிகர். அவரது இழப்பு திரையுல குக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டாக்டர் பாரிவேந்தர் எம் பி , விசிக தலைவர் திருமாவள வன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
