தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை நடிகர்
ஈட்டி கோவிந்தன். வயது 78.
திருமணமாகாதவர். அவரது குடும்பம் யாரும் இங்கு இல்லை.
கடந்த 23ம் தேதி வடபழனி பஸ்டாண்ட் அருகே மயங்கி விழுந்திருக் கிறார். இவரை சிலர் கே.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். அங்கு கடந்த 28ம் தேதி இறந்துள் ளார்.
அவர் இறந்த தகவல் நடிகர் சங்கத்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து
அவரது ஈம சடங்கு செலவு மொத்தமும் நடிகர் சங்கமே ஏற்றுக் கொண்டு நடத்தியது.
வடபழனி ஏவிஎம் பின்புறம் உள்ள சுடுகாட்டில் நடந்த இறுதி சடங்கில், நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் கலந்து கொண்டு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். நடிகர் சங்கமும் அவரது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளது.
#NadigarSangam #siaa
@actornasser @VishalKOfficial @Karthi_Offl #poochiSmurugan #karunas
@johnsoncinepro