ரெட்டை சுழி இயக்குனர் தாமிரா இன்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ஆரி அர்ஜுனா இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது :
என் முதல் வெள்ளித்திரை பயணத்திற்கு வித்திட்ட இயக்குனரும் மாபெரும் கதாசிரியர் மான தாமிரா இன்று நம்மோடு இல்லை என்ற செய்தி எனக்கு பேரதிர்ச்சி கொடுத்து என்னை மிகவும் மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது…
என்னை பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு அழைத்தபோது எனக்கு சிறியதாக தயக்கம் இருந்தது, அப்போது *நீ சரியாக இருக்கும்போது உன்னை யார் மாற்ற இயலும்* என்று என் தயக்கத்தை போக்கி என்னை பிக்பாஸில் அடி எடுத்து வைக்க ஊக்கப்படுத்தினார் அவர் நம்மிடையே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை..
அவர் மறைவினால் அவரது எண்ணங்களில் தோன்றிய எத்தனையோ சிறந்த கதைகளும் மரணித்து விட்டது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆரி அர்ஜுனா கூறி உள்ளார்.
Ivar