Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அத்தலட்டிக் வீரர்களை மதிக்கிறேன்!! – நடிகர் ஆதி

கிளாப் படத்தில் லிபத்திலொரஉ ஒரு காலை இழந்த அத்தலடி வீரராக ஆதி நடித்திருந்தார் இதுபற்றி அவர் கூறியதாவது:

மன அழுத்தத்துடன் கூடிய நபரின் கதாபாத்திரம் என்று இப்படத்தின் கதையை கேட்கும் போது பிடித்திருந்தது. அதைவிட நடிக்கும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஆழமாக தெரிந்து கொண்டு அவங்க வாயால் கேட்டு தெரிந்துக் கொண்டு நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.

லிங்குசாமி இயக்கத்தில் வில்லனாக #வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன்.

சேலஞ்சிங் ஆன கதையை தான் நிதானமாக தேர்ந்தெடுக்கிறேன். அதற்கு மொழி ஒரு தடை இல்லை. நான் எப்போதும் மொழியை சார்ந்து கதாபாத்திரத்தை தேர்வு செய்ய மாட்டேன்.

எனக்கேற்ற வசதியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தால் நான் வெறும் போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்துக் கொண்டிருப்பேன். அது என்னை சலிப்படைய செய்யும். அப்படி ஆகாமல் இருக்க, எனக்கு நானே சவால் விடும் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.

அடுத்து விரைவில் வெளியாகவிருக்கும் படம் #பார்ட்னர் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம். நகைச்சுவை அனைத்து தரப்பினருக்கும் சென்று சேரும். இப்படத்தில் ஹன்சிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், இன்னும் நிறைய காமெடி பட்டாளமே நடிக்கிறார்கள்.

இப்படம் ஆரம்பிக்கும்போதே நானும் இயக்குனரும் பேசினோம். நிச்சயம் #கனா படத்தைப் போல சீன மொழியில் இப்படமும் வெளியாகும். ஏனென்றால், மொழியைக் கடந்து உணர்வுபூர்வமாக அனைவரையும் இணைக்கும்.

எல்லா படங்களையும் ஹாலிவுட்டில் ரீமேக் அல்லது டப்பிங் செய்ய மாட்டார்கள். என்னுடய படத்தை அவர்கள் தேர்வு செய்தால் நிச்சயம் நான் செய்வேன்.

கொரானா நேரத்தில் மக்கள் பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கி றார்கள். நிறைய படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இன்று இருக்கிறது. சுமார் ஏழு வருடங்கள் கழித்து தெரிந்து கொள்ளவேண்டிய சினிமா அனுபவத்தை இப்போதே சரியாக மக்கள் தெரிந்து வைத்துள்ளார்கள்.
அதனால், ஏதாவது ஒரு விஷயம் இல்லாமல் இன்று எந்த படத்தையும் மக்கள் ரசிப்பதில்லை.

திரையரங்கிற்கு மக்கள் இன்னும் முழுதாக வர ஆரம்பிக்கவில்லை. ஓடிடி-யில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு படத்திற்கு திரையரங்கம் நிறைந்திருந்ததைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

பல நபர்கள் எனக்கு தொடர்பு கொண்டு பாராட்டியது #கிளாப் படத்திற்கு தான். என்னுடைய அலுவலக நண்பர்கள், நான் பார்க்காத நபர்கள் கூட என்னைத் தொடர்புக் கொண்டு பாராட்டினார்கள்.

படத்தில், நான் கூட்டி வந்த பெண் போனதும் அழுகிற காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து முடித்தேன். ரொம்ப சேலன்சிங்காக இருந்தது. அதுவும், நாற்காலிகளை, கண்ணாடியை திரும்ப திரும்ப உடைத்து எடுக்கும் அளவிற்கு பட்ஜெட் இல்லை.

ஊனமுற்ற இந்த கேரக்டர் போல் நான் நடிக்க அம்மாவிற்கு அவ்வளவாக பிடிக்காது. ஜாலியான படங்களில் நடிடா என்பார். ஆனால், அப்பா இந்த துறையில் இருப்பதால் அவருக்கு பிடித்திருந்தது.. பாராட்டினார்.

இப்படத்தில் நடிப்பதற்காக குறிப்பிற்காக சில படங்களை பார்க்க சொன்னார், டைரக்டர். ஆனால், எந்த படத்தை படத்தையும் பார்க்காமல் தான் இதில் படித்தேன்.

நிறைய காட்சிகள் வெற்றிகரமாக வந்திருந்தது. இசையே இல்லாமல் அந்த சில காட்சிகள் நன்றாக வருமா என்று நினைத்தோம். அந்த காட்சியை எல்லாம் இசை அமைப்பாளார் பாராட்டினது பெரிய பாராட்டாக நினைத்தேன்.

#மரகதநாணயம் வித்தியாசமான கதையம்சம். நடிக்க ஆர்வமாக இருந்தது. எல்லோரும் கேட்கிறர்கள்.. மரகத நாணயம்2 வருமா என்று.. கண்டிப்பக வரும். அதற்கான வேலை நடக்கிறது.

 

இப்படத்தில் நடிக்கும் முன்புவரை விளையாட்டைப் பற்றி தெரியாது. ஆனால், இப்படத்திற்கு பிறகு அத்தலட்டிக் விளையாட்டுபவர்கள் மீது மிகப் பெரிய மரியாதை வந்திருக்கிறது. 365 நாளும் அவர்கள் பயிற்சி எடுக்கிறார்கள்.
நாம் தினமும் கடை பிடிக்க முடியாத உணவு மற்றும் அனைத்து பழக்க வழக்கங்களை அவர்கள் வாழ்க்கையாகவே மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் தோல்வி அடையும்போது அவர்கள் அனுபவிக்கும் ‘பெயின்’ எப்படி இருக்கும் என்பதை இப்பது என்னால் உணர முடிந்தது. ஒலிம்பிக்கில் வெற்றியடைந்தால் மட்டுமே வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அதுபோன்று இல்லாமல் இவர்களுக்கு ஒலிம்பிக்கில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

கூடிய விரைவில் திருமண அறிவிப்பு வரும். காதல் மற்றும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். அதற்கான முறையான அறிவிப்பை விரைவில் அறிவிப்பேன்.

இவ்வாறு, நடிகர் ஆதி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Related posts

Banaras Pre-release Event in Hubli

Jai Chandran

மாநாடு பட சேட்டிலைட் விவகாரம்: இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Jai Chandran

HanuMan The First Pan-Indian SuperHero Film

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend