ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தற்போது ” பாம்பாட்டம் ” படத்தை தயாரித்து வருகிறார் இதை தவிர ” ரஜினி ” என்ற புதிய படத்தையும் தயாரிக்கிறார். இந்த தயாரிப்பாளருடன் பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தை A.வெங்கடேஷ் இயக்கி அது மாபெரும் வெற்றி பெற்றது. அதே வெற்றிக் கூட்டணி இந்த “ரஜினி “படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
“மஹாராஜா” படத்தில் நடித்த விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையை சார்ந்த “கைநாட் அரோரா” தமிழில் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு மனோ வி நாயாரணன். வசனம் அகில் பாபு அரவிந்த். இசை அம்ரிஷ். கலை ஏ.பழனிவேல். ஸ்டன்ட் சூப்பர் சுப்பராயன். மக்கள் தொடர்பு மணவை புவன். இணை தயாரிப்பு அருண் துளி, சுபாஷ் ஆர் ஷெட்டி, கோவை பாலசுப்ரமணி.. தயாரிப்பு வி.பழனிவேல். திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஏ.வெங்கடேஷ்.
ரஜினி படம் பற்றி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறியதாவது:
திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமா படமாக இதை உருவாக்க உள்ளேன். படத்தின் நாயகன் ரஜினி ( விஜய் சத்யா ) எதிர்பாராத விதமாக ஒரு நாள் இரவில் ஒரு விபத்தினால் பல சிக்கல்களை சந்திக்கிறார், அது என்ன மாதிரியான சிக்கல்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது.
படத்தில் நாயகனின் பெயர் ரஜினி பிரியன் அவரை நண்பர்கள் செல்லமாக ரஜினி என்று அழைப்பார்கள் அதனால் தான் படத்திற்கு “ரஜினி” என்று பெயர் வைத்துள்ளேன்
இவ்வாறு இயக்குனர் ஏ.வெங்கடேஷ். கூறினார்.
படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது தொடர்ந்து சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது.