Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டோன்ட் டிரபுல் தி டிரபுல்  (பட விமர்சனம்)

படம் : டோன்ட் டிரபுல் தி டிரபுல்

நடிப்பு: பஹத் பாசில், சாரா பலேகர், மகேஷ் மஞ்ச்ரேகர்,
சௌரப் சச்தேவா,
வெங்கடேஷ் காகுமானு,
சுப்பராஜு, திவ்யா பிள்ளை,
எஸ். எஸ். ஷஷாங்க்

தயாரிப்பு: ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ். எஸ். கார்த்திகேயா

வழங்குபவர் :எஸ். எஸ். ராஜமௌலி

இசை – கால பைரவா

ஒளிப்பதிவு – பிராட் பிரான்சிஸ் ACS

இயக்கம்:ஷஷாங்க் யேலேட்டி

பி ஆர் ஓ : யுவராஜ்

கதை :  ஆம்புலன்ஸ் டிரைவர்.சூரி  (பஹத் பாசில் கடன் தொல்லையில்  தவிக்கிறார். வாங்கிய பணத்தை தராவிட்டால் தீர்த்துக்கட்டி விடுவேன் என்று கடன் கொடுத்த  பாய் எச்சரிக்கிறார். இந்நிலையில் குழந்தையை கடத்தி பணம் பறித்து கடனை அடைக்க சூரி திட்டமிடுகிறான்  அந்த நேரத்தில் ஒரு குழந்தை சூரியை தஞ்சம் அடைகிறது. அதை நைசாக பேசி  தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சூரி பின்னர்  குடும்பத்தாரிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்கிறான்  ஆனால் சூரியிடம் வந்து சேர்ந்த குழந்தை ஒரு பேய் என்பது தெரிய வரும்போது கதை இன்னும் பாய்ச்சல் எடுக்கிறது.

பேண்டஸி கதைகள் அவ்வப்போது வருவதுண்டு. இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி  ஏற்கனவே பாகுபலி போன்ற பேண்டஸி படங்களை தந்தவர் அவர்தான் இந்த படத்தை வழங்குகிறார். அவரது மகன் கார்த்திகேயா படத்தை தயாரித்திருக்கிறார். இதனால் செலவுக்கு பஞ்சமில்லை,  படம் முழுக்க மாய வித்தைகள் காட்டுகிறார்கள்

ஆம்புலன்ஸ் டிரைவராக வரும் பஹத் பாசில்  துருதுருவென்று தனது கதாபாத்திரத்தை  எனர்ஜி கொப்பளிக்க செய்திருக்கிறார்.   கடன் கொடுத்த பாய் தனக்கு கெடு வைத்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் பஹத் தன்னை நாடிவரும் குட்டிப் பெண்   சாராவிடம், ” உனது அம்மா அப்பாவை காட்டுகிறேன் எனக்கு மேஜிக் தெரியும்” என்று ஏமாற்றி அவரிடம் நட்பாக இருப்பதும், பின்னர் சாரா குடும்பத்தாரிடம் மிரட்டி பணம் பறிக்க திட்டமிடுவதும் சரியான சகுனித்தனம்.

ஒரு கட்டத்தில் சாரா ஒரு பேய் என்று தெரிந்ததும் அதனிடமிருந்து தப்பிக்க பஹத் மிரண்டு ஓடுவதும்  எங்கு சென்றாலும் விடாமல் துரத்தும் சாராவை கண்டு நடுங்குவதுமாக காமெடி செய்திருக்கிறார் பஹத்.

சாமியார் சொன்ன யோசனைப்படி திடீரென்று சாராவை பயன்படுத்தி கடன்கார பாயை மந்திரத்தால் பறக்க விடுவது  குழந்தைகளுக்கு குஷி தரும் காட்சிகள்.

பேயாக நடித்திருக்கும் சாரா எந்தவொரு இடத்திலும் பேய் போல் அகோரமாக இல்லாமல்  கொஞ்சி பேசக்கூடிய ஒரு குழந்தையாகவே இருப்பது  பயமுறுத்தாத பாசிட்டிவான விஷயம்.

மகேஷ் மஞ்ச்ரேகர்,
சௌரப் சச்தேவா,
வெங்கடேஷ் காகுமானு,
சுப்பராஜு, திவ்யா பிள்ளை,
எஸ். எஸ். ஷஷாங்க் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்

ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ். எஸ். கார்த்திகேயா படத்தை தயாரித்திருக்கின்றனர்.

கால பைரவா  இசை, பிராட் பிரான்சிஸ் ACS ஒளிப்பதிவு படத்துக்கு பிளஸ்.

எளிமையான ஒரு கதையை அனைத்து தரப்புக்கும் பிடிக்கும் படியான   பேண்டஸி ஸ்டைலில் இயக்குனர்  ஷஷாங்க் யேலேட்டி படத்தை இயக்கியிருக்கிறார்

டோன்ட் டிரபுல் தி டிரபுல் – குழந்தைகளுக்கும் குட்டீஸ்களுக்கும் பேண்டஸி விருந்து.

Review by

K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

 

.

 

 

 

Related posts

ஜெய்யின் “சட்டென்று மாறுது வானிலை ” பட வெளியீட்டுவிழா!..

Jai Chandran

Aima A survival suspense thriller

Jai Chandran

CII Dakshin has the potential to unite Indian cinema: Udhayanidhi

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend