Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கிராண்ட் மாஸ்டர் (பட விமர்சனம் )

படம்: கிராண்ட் மாஸ்டர்

நடிப்பு: அபர்ணதி, லிங்கேஷ், வெற்றி செழியன், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு

தயாரிப்பு: வேலாயுதம்

இசை: ஆண்டனி

ஒளிப்பதிவு : அர்ஜுன் ரவி, ஞானசேகர்

இயக்கம்: வெற்றி செழியன்

பிஆர்ஓ : சதீஷ் (AIM )

கதை : துப்புரவு பெண் தொழிலாளி மகன் செஸ் விளையாடுவதில் ஆர்வம் மிகுந்திருக்கிறான். அவன் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவரன் என்பதால் பள்ளி முதல் எல்லா இடத்திலும் ஒதுக்கப்படுகிறான். சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது அந்த சிறுவனின் லட்சியம். அது நிறைவேறுகிறதா என்பது கிளைமாக்ஸ்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் மேம்பாட்டை மையமாக வைத்து இயக்குனர் பா ரஞ்சித் வருகைக்குப் பிறகு ஏராளமான இயக்குனர்கள் அந்த பாணியில் படங்கள் இயக்குகிறார்கள். அந்த வரிசையில் இந்த படமும் இடம் பிடிக்கிறது.

வழக்கமாக கபடி, கிரிக்கெட் என்று  தடாலடி ஆட்டங்களை  இது போன்ற கதைகளுக்கு மையப்படுத்துவது வழக்கம் ஆனால் இந்த படத்தில் சற்று வித்தியாசமாக செஸ் போட்டி (சதுரங்க போட்டி ) பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். கபடி கிரிக்கெட் போல் இந்த போட்டியை திரைப்படத்திற்கு ஏற்ப விறுவிறுப்பான காட்சியாக அமைக்க முடியுமா என்ற  கேள்வி எழும் அதற்கு பதில் தரும் விதமாக சதுரங்க போட்டியை விறுவிறுப்பாக மாற்றுவதற்கு என்னென்ன முடியுமோ அவ்வளவு ஆக்சன் காட்சிகளும் பின்னணியில் நிகழ்த்தப்படுவதால் திரைக்கதையின் வேகத்துக்கு பஞ்சமில்லை.

துப்புரவு தொழிலாளியாக அபர்ணதி நடித்திருக்கிறார். அவரது மகனாக அஸ்வின் வருகிறார். இருவருமே தங்களது கதாபாத்திரத்தை எப்படி எல்லாம் மேம்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் மேம்படுத்துவதற்காக குப்பை கூலங்களுக்கிடையே  உழன்று புரண்டு அருவெறுப்பு பார்க்காமல் நடித்திருக்கிறார்கள்  அந்த மனப்பக்குவம் அவர்கள் இருவரையும் மனதில் உயர்ந்த இடத்தில் நிற்க வைக்கிறது.

தன் மகனை வக்கீலுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று அபர்ணதி நினைக்கிறார் ஆனால் அவரது மகன் அஸ்வின் சதுரங்க விளையாட்டில் கிரான்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்று துடிப்பது உயிரோட்டம் நிறைந்தது.

துப்புரவு தொழிலாளியான  அபர்ணதி ஒரு கட்டத்தில் பெரிய சதுரங்க விளையாட்டு வீராங்கனை என்ற உண்மை வெளிப்படும்போது கதையில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது.

சிறுவன் அஸ்வின் சதுரங்க போட்டியில் ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக சுரேஷ் மேனன் வில்லத்தனமான வேலைகளில் ஈடுபட்டு சிறுவனை கொல்ல முயல்து  ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

அபர்ணதி கணவராக லிங்கேஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன்  வெற்றி செழியன், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள்.

படத்தை  வேலாயுதம் தயாரித்திருக்கிறார். ஆண்டனி இசை, அர்ஜுன் ரவி, ஞானசேகர் கேமரா காட்சிகளில் குடிசை பகுதியையும் கோபுர பகுதியையும் ஒருங்கிணைத்திருக்கிறது

இயக்குனர் வெற்றி செழியன்  கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதுடன் காட்சிகளை அடிமட்டத்துக்கு இறங்கி அமைத்திருக்கிறார். சதுரங்கப் போட்டி என்ற ஒரு உயர் மட்ட விளையாட்டை கையில் எடுத்திருக்கும் இயக்குனர் வில்லனுக்கும் கதாநாயகிக்கும் இடையே நடக்கும் சவாலையும்  இன்னும் கொஞ்சம் டீசன்டாக  மாற்றி அமைத்திருக்கலாம்.

கிராண்ட் மாஸ்டர்  – தன்னம்பிக்கை படிக்கட்டு.

 

Review by

K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

 

Related posts

Batch-II admissions of Director Vetrimaaran’s film institute

Jai Chandran

அசோக் செல்வனின் அடுத்த படம் நித்தம் ஒரு வானம்

Jai Chandran

லிப்ட் பட விவகாரம் குறித்து லிப்ரா பட நிறுவனம் அறிக்கை:

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend