Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

பீப் (பட விமர்சனம் )

படம் : பீப்

நடிப்பு: ராகவ், யாமினி லட்சுமணன், பிரேமா கண்ணா, ஐடிஐ ஆச்சார்யா, அருண் மோகன்,  ஷ்ரவன் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா, பிரியதர்ஷினி, நிதிஷ், பாலாஜி, ராஜவேல், அப்துல், ஜி சிவகுமார், வெங்கட் ரமேஷ், ஆர் கணேசன், சண்முகா

தயாரிப்பு நிர்வாகம் : ஆர் கணேசன்

இசை: பிரசாந்த் விஹாரி

ஒளிப்பதிவு : பிரதீப் பத்மகுமார்

இயக்கம்’ இல சண்முக சுந்தர்

பி ஆர் ஓ  A. ஜான்

கதை : கால் கேர்ள் ஒருவருடன்  ராகவ்க்கு பழக்கம் ஏற்படுகிறது. திடீரென்று அந்தப் பெண் மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடக்கிறார். அது தற்கொலையா அல்லது யாராவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? அப்படி செய்தால் அதை யார் செய்தது என்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது. தனக்கு தோழியாக இருந்த பெண் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ராகவ் இது குறித்த போலீசில் புகார் கொடுத்து நீதி கேட்கிறார். அத்துடன் அவரும் களத்தில் இறங்கி யார் குற்றவாளி என்பதை துப்பறிய முயல்கிறார்   இதில் கால்கேர்ள் சாவிற்கு என்ன காரணம் என்பதற்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

பீப் வழக்கமான  திரைப்படமாக இல்லாமல்  சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புத்தக வடிவில் படித்தது போன்ற பாணியில்  திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது   அதனால் படத்தில் காட்சிகள் முழுக்க முழுக்க உரையாடலாகவே கடந்து செல்கிறது

ராகவ் மற்றும் நண்பர்கள்  பெண்களை சைட் அடிப்பது பின்னர் தங்களுக்குள் அவர்களைப் பற்றி பேசிக் கொள்வது போன்ற காட்சிகள் யாரோ சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து பேசிக் கொள்வது போலவும் அதை அருகில் இருந்து கவனிப்பது போன்ற உணர்வு  படம் பார்க்கும்போது ஏற்படுகிறது.

கால் கேர்ளாக  யாமினி செதுக்கிய சிலைபோல் வருகிறார். ராகவுக்கும் யாமினிக்கும் ஏற்படும் நட்பு காமத்தை மீறிய தோழமை உணர்வு என்ற கோணத்தில் தான் நகர்கிறது. திடீரென்று யாமினி மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடப்பது  ஷாக்.

யாமினி எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிக்க போலீஸுடன் சேர்ந்து ராகவும் அவரது நண்பர்களும் துப்பறியும் வேலையில் ஈடுபடுவதும், ராகவுக்கு புகைப்படத்தை பார்த்தவுடன் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கும் ஒரு சிறப்பு ஆற்றல் இருப்பதால் அதைக் கொண்டு கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்புடன் காட்சிகள் நகர்ந்தாலும் அதை ஈடு செய்யும் வகையில் காட்சிகளில் அழுத்தமில்லை.

போட்டோவை பார்த்து என்ன நடந்தது என்பதை சொல்லும் திறமை கொண்ட ராகவ் பலமுறை யாமினி இறந்து கிடக்கும் புகைப்படத்தை பார்த்தும் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முற்படாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

பிரேமா கண்ணா, ஐடிஐ ஆச்சார்யா, அருண் மோகன்,  ஷ்ரவன் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா, பிரியதர்ஷினி, நிதிஷ், பாலாஜி, ராஜவேல், அப்துல், ஜி சிவகுமார், வெங்கட் ரமேஷ், ஆர் கணேசன்,  என பலர் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ப்ரொபசர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எல் சண்முகா தனித்து தெரிகிறார்.

பிரசாந்த் விஹாரி இசை அமைத்திருக்கிறார். பிரதீப் பத்மகுமார் கேமரா காட்சிகளை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது

இயக்குனர் இல சண்முக சுந்தர் மாறுபட்ட ஒரு பாணியில் படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாவலை போல் காட்சிகள் அமைத்திருப்பது சினிமாவுக்கு பொருத்தமாக இல்லாவிட்டாலும் கொலைகாரன் யார் என்ற  உண்மையை  தெரிந்து கொள்வதற்காக கிளைமாக்ஸ் வரை ஆடியன்சை இருக்கையில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர்.

பீப் – விறுவிறுப்பு குறைக்கப்பட்ட ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்.

Review by K. Jayachandhiran

!!ee. Trendingcinemasnow.com

 

 

 

 

 

D

Related posts

Actress Ashima Narwal likes challenging roles

Jai Chandran

Dulquer Salmaan Much Awaited First Look of ‘I Am Game’..

Jai Chandran

Veetla Vishesham will be bringing back family audiences to theaters – Sathyaraj

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend