அமரன் படத்திற்கு சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது கிடைக்காத நிலையில் சிவகார்த்திகேயன் ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தார்.
72 ஆவது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 2024 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை படமாக அமரன் படத்திற்காக பல்வேறு விருதுகள் எதிர்பார்த்து காத்திருந்தனர் குறிப்பாக சிவகார்த்திகேயன் சாய்பல்லவி ஆகியோருக்கு சிறந்த நடிகர் நடிகைக்கான விருதுகள் கிடைக்கும் என்று ஆவலுடன் இருந்தனர் ஆனால் அவர்கள் இருவருக்கும் எந்த விருதும் கிடைக்கவில்லை. துன்பத்திலும் ஒரு இன்பம் என்பது போல் அவர்களுக்கு விருது கிடைக்காத நிலையிலும் அவரால் படத்திற்கு மற்ற பிரிவில் மூன்று விருதுகள் கிடைத்திருக்கின்றன என்பது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது
அமரன் (Amaran) படம்இராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல, சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் தயாரித்தது. 2024இல் அக்டோபர் 31 இல் அமரன் திரைக்கு வந்தது. தமிழ் அதிரடி திரைப்படம் மட்டுமல்ல இந்திய ராணுவ வீரர்களின் அதிரடி தாக்குதலை மையமாக வைத்து உருவான படமாகும் இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த வரதராஜனாக நடித்தார்.
மேலும் சாய் பல்லவி பவன் அரோரா ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தியஇராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சிவ் அரூர் மற்றும் இராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாக அமரன் படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது
அமரன் படம் திரைக்கு வந்து பெரியவர்கள் முதல் பெண்கள் சிறியவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பு பெற்று வசூல் ரீதியான வெற்றிப் படமாக சாதனையும் படைத்தது.
இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் ராணுவ போர் வீரர்களுக்கான மற்றும் ராணுவ அதிகாரிக்கான கடுமையான பயிற்சிகளை பெற்று நடித்தார். அவரது மனைவியாக நடித்த சாய் பல்லவியின் நடிப்பும் பெரும் அளவில் பாராட்டை பெற்றது இப்படத்தை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் சாய் பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று அன்றைய தினம் திரை உலகினரும் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்திருந்தனர் ..
இந்நிலையில் நேற்று 2024ம் ஆண்டுக்கானதேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி ஆகியோர் தேசிய விருது பெறுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர் . ஆனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடையும் வகையில் அவர்கள் இருவருக்குமே தேசிய விருது கிடைக்கவில்லை ஆனால் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார், எடிட்டர் கலைவாணன் ஆகிய மூவர் இப்படத்திற்காக விருது பெற்றனர்
கமர்சியல் படங்களிலேயே நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய அமரன் பட வாய்ப்பு கிடைத்தது அதற்காக முழு கவனத்தையும் செலுத்தி நடித்த சிவகார்த்திகேயன் தனக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அந்த வாய்ப்பு கைநழுவி போயிருப்பது சிவகார்த்திகேயனையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி மற்றும் வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.
