Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லீடர் (பட விமர்சனம்)

படம்: லீடர்

நடிப்பு: லெஜெண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், அமிர்தா அய்யர், பாகுபலி பிரபாகரன், வி டி வி கணேஷ், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், இயல், பத்மன், யோகிராம் , வேல அருணாச்சலம், அறந்தாங்கி நிஷா, ஆதித்யா கதிர், நிரஞ்சன் தாமஸ், படவா கோபி, அசோக் பாண்டியன், சோபன் பாபு, விஜயலட்சுமி, முருகன், ஜெய ஸ்மித்ரா குமார் நடராஜன்

தயாரிப்பு: லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரடக்சன்ஸ்

இசை: ஜிப்ரான் வைபோதா

ஸ்டன்ட்ஸ் : மகேஷ் மேத்யூ

ஒளிப்பதிவு: வெங்கடேஷ். எஸ்

இயக்கம்: ஆர் எஸ் துரை செந்தில்குமார்

பி ஆர் ஓ : நிகில் முருகன்

ரகசிய உளவு அதிரடிப் படையிலிருக்கும் சக்திவேல் என்கிற பொன்மாறன் ( லெஜன்ட் சரவணன்) துறைமுகம் ஒன்றில் கார் மெக்கானிக் வேலை செய்கிறார். காது கேளாத தன் குழந்தை மீது பாசம் வைத்து வளர்க்கிறார். ஒரு சமயம் அந்த குழந்தையை சர்வதேச கடத்தல் கூட்டம் கடத்தி சக்திவேலை மிரட்டுகிறது. போலீஸ் கஸ்டடியில் இருக்கும் பலகோடி மதிப்புள்ள வெடிபொருள் மருந்தை மீட்டுத் தந்தால் தான் குழந்தையை விடுவிப்போம் என்கிறது . உயிருக்குயிராக வளர்க்கும் குழந்தைக்காக தன் உயிரையும் பணயம் வைத்து இந்த வேலையை செய்து முடிக்க துணிகிறார் சக்திவேல். இதில் போலீஸ், சர்வேச கடத்தல் கூட்டம், சக்திவேல் ஆகியோருக்கு இடையே கடும் மோதல் நடக்கிறது இந்த மோதலுக்கு என்ன காரணம்? குழந்தையை சக்திவேலால் மீட்க முடிந்ததா? என்பதற்கு ஆக்சன் அதிரடியாக பதில் அளிக்கிறது லீடர்.

லெஜெண்ட் சரவணன் இப்படியொரு அதிரடி ஆக்ஷனை அசர வைக்கும் வகையில் செய்வார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அஜித், விஜய் படங்களுக்கு நிகராக ஆக்சன் காட்சிகள் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நரம்புகளை முறுக்கேற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யூ குழுவுக்கு கைதட்டல் தரலாம்.

லெஜண்ட் சரவணனனா ஆகஷன் காட்சிகளை இவ்வளவு பர்ஃபெக்டாக செய்திருக்கிறார் என்று ரசிகர்களை மூக்கின் மேல் விரல்வைக்க செய்து விடுகிறார்.

ஹீரோ என்றவுடன் விதவிதமான காஸ்ட்யூம் போட்டு, ஒன்றுக்கு மூன்று ஹீரோயின்களுடன் டூயட் பாடிவிட்டு காதல் அம்பு பறக்கவிட்டு செல்லும் ரொமான்டிக் ஹீரோவாக இல்லாமல் அனல் தெறிக்கும் சண்டை காட்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு லெஜன்ட் சரவணன் இப்படத்தில் நடித்திருப்பது அவர் நடிப்பின் மீதும் தனது கதாபாத்திரத்தின் மீதும் வைத்திருந்த நம்பிக்கைக்கு சான்று. குறிப்பாக வந்தே பாரத் விரைவு ரயிலில் வெளிநாட்டு ஸ்டண்ட் வீரர்களுடன் அந்த சிறிய பெட்டிக்குள் மோதும் காட்சிகள் அரங்கை அதிர விடுகிறது.

படத்தில் நிறைய சஸ்பென்ஸ்கள் வைக்கப்பட்டிருப்பது இன்னொரு பிளஸ். வில்லனாக வரும் சந்தோஷ் பிரதாப் இதுநாள் வரை ஹீரோவாக நடித்திருந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த படத்தில் அவர் வில்லனாக புதிய பரிமாணத்துக்கு மாறி தனது இமேஜையே மாற்றி இருக்கிறார். இந்த பாணி இவருக்கு ரொம்பவே ஒத்துப் போகிறது. ஹீரோ ஆசையை விட்டுவிட்டு இது போன்ற மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தால் அவரது மார்க்கெட் ஜிவ்வென்று உயர வாய்ப்பிருக்கிறது.

கதாநாயகி பாயல் ராஜ்புத் வேகமான அதிரடிகளில் ஈடுபட்டாலும் அவரது கதாபாத்திரம் கதைக்கு பெரிய சஸ்பென்சாக இருப்பது எதிர்பாராத திருப்பம்.

போலீஸ் அதிகாரிகளாக வரும் ஷாம், ஆண்ட்ரியா கதாபாத்திரங்களை கனக்கச்சிதமாக செய்திருக்கின்றனர். இவர்களுடன் லால், அமிர்தா அய்யர், பாகுபலி பிரபாகரன், வி டி வி கணேஷ், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், இயல், பத்மன், யோகிராம் , வேல அருணாச்சலம், அறந்தாங்கி நிஷா, ஆதித்யா கதிர், நிரஞ்சன் தாமஸ், படவா கோபி, அசோக் பாண்டியன், சோபன் பாபு, விஜயலட்சுமி, முருகன், ஜெய ஸ்மித்ரா குமார் நடராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது

பான் இந்தியா அளவுக்கு லீடர் படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறது லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரடக்சன்ஸ்.

மெலடி பாடல்களில் தன்னை தனித்துவமாக காட்டிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா இப்படத்தில் அரங்கை அதிர விடும் பாம் ஸ்குவாட் இசையமைப்பாளராக மாறி காட்சிக்கு காட்சி இடி முழக்க இசையால் இருக்கைகளை
அதிர விட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். எஸ் காட்சிகளை மாறுபட்ட கலர் டோனுக்குட்படுத்தி கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக் கொள்கிறார்.

த்ரில்லரான கதையை இயக்கி படம் நன்றாக இருக்கிறது என்று ஒவ்வொரு உதட்டிலும் வார்த்தைகளை வந்து விழச் செய்திருக்கிறார இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில்குமார் இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகத்துக்கான லீடையும் கொடுத்து எதிர்பார்ப்பை எகிற விட்டிருக்கிறார்.

லீடர்- லெஜெண்ட் சரவணனுக்கு ஆக்சன் ஹீரோ பட்டத்தை உறுதி செய்து தரும்.

Movie Review By

K. Jayachandhiran
trending cinemas now.com

 

 

Related posts

Video of the short film SOLITUDE is releasing on 25th June,

Jai Chandran

மார்கன் (பட விமர்சனம்)

Jai Chandran

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ஆப்ரகாமின் பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend