Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஐ நோபடி ( I Nobody ) (பட விமர்சனம் )

படம்: ஐ நோபடி ( I Nobody )

நடிப்பு : ப்ரித்விராஜ் சுகுமாரன், பூ பார்வதி, அக்கீம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், மதுபால், சங்கர் ராமகிருஷ்ணன்

தயாரிப்பு: சுப்ரியா மேனன்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவு :
தினேஷ் புருஷோத்தமன்

இயக்கம்: நிசாம் பஷீர்

பிஆர்ஓ : யுவராஜ்

கதை : அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ராஜீவன் (ப்ரித்திவிராஜ் ) வங்கி செல்கிறார். அங்கே மூன்று கொள்ளையர்கள் புகுந்து திடீரென்று 17 கோடி கொள்ளையடிக்கின்றனர். இந்த கொள்ளை வழக்கில் ராஜீவன் சீக்கிக் கொள்கிறார். அவரை போலீஸ் ஒரு பக்கம் தேடுகிறது, இன்னொரு பக்கம் ரவுடி கும்பல் துரத்துகிறது. திடீரென்று ராஜீவன் குழந்தையை சிலர் கடத்துகின்றனர்.. இந்த இடியாப்ப சிக்கலிலிருந்து ராஜீவன் தப்பிக்க முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் திரில்லான பதில் அளிக்கிறது.

தொடக்க காட்சியில் வங்கிக்குள் ப்ரித்விராஜ் நுழையும்போதே ஒரு நிசப்தம் நிலவுகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் கொள்ளை, கொள்ளையர்கள் ப்ரித்விராஜை கடத்திச் சொல்வது என பரபரப்பாக நகர்கிறது. முதல் பாதி படம் வரை ஆக்சன் பாணியில் பறக்கும் காட்சிகள் இரண்டாம் பாதியில் குறைந்தாலும் போலீஸ் விசாரணை, பணத்தை பறிக்க துரத்தும் கும்பல், தலை மறைவாகும் ப்ரித்விராஜ்
என புலன் விசாரணை சீன்களாக நகர்கிறது.

ப்ரித்விராஜின் கார் சேஸிங் ஆக்சன் காட்சிகள் கொஞ்சம் வேகம் கூட்டுகிறது.
ப்ரித்விராஜின் மனைவியாக வரும் பூ பார்வதி கடத்திச் செல்லப்பட்ட தன் மகளை மீட்பதற்காக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவது என்று ஒரு பகீர் கிளப்புகிறார்.

சுப்ரியா மேனன் தயாரித்திருக்கிறார்

ஜேக்ஸ் பிஜாய் இசை மிகையில்லை
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு நார்மல்

வழக்கமான மலையாள பாணியிலிருந்து மாற்றி ஒரு ஆக்சன் கதையாக இயக்குனர் நிசாம் பஷீர் படத்தை தந்திருக்கிறார்.

ஐ நோபடி – ஒரு முறை பார்க்கலாம்.

Review By

K. Jayachandhiran

Trending cinemas now. com

 

Related posts

Atlee presents – Vijay Sethupathi starrer “Baththa”..

Jai Chandran

என்னை வாழ விடுங்கள் – சோனா கண்ணீர்

Jai Chandran

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend