Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பிளாஸ்ட் (பட விமர்சனம் )

படம்: பிளாஸ்ட்

நடிப்பு: அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர்

தயாரிப்பு : கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாக்கம்

இசை: ரவி பசுரூர

ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன்

இயக்கம்: சுபாஷ் கே ராஜ்

பிஆர்ஓ: நிகில் முருகன்

கதை: கராத்தே மாஸ்டர் அர்ஜுன் தன் மகள் பிரீத்திக்கு தற்காப்பு கலையான கராத்தே கற்றுத் தருகிறார். அர்ஜுன் மனைவி அபிராமியும் கராத்தேவில் கை சேர்ந்தவர். இவர்கள் யார் வம்புக்கும் போகாமல்  அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக ஒரு பெரிய கடத்தல் கூட்டத்துடன் இவர்களுக்கு மோதல் ஏற்படுகிறது. பெரிய ரவுடி சாம்ராஜ்யத்தை எதிர்த்து அர்ஜுன் குடும்பத்தால் வெற்றி பெற முடிந்ததா என்பதற்கு ஆக்சன் அதிரடியுடன் பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

சமீப காலமாக அர்ஜுன் பல படங்களில் நடித்திருந்தாலும் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படம் என்பதை நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் களம் இறங்கி நிகழ்த்தியிருக்கிறார்.
சும்மாவே ரவுடிகளை அடித்து சாய்க்கும் அர்ஜுன் இதில் கராத்தே மாஸ்டர் என்றால் அவரது ஆக்சன் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ? அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்குகிறது.

அர்ஜுன் ஆக்சன் காட்டுகிறார் என்று பார்த்தால் அவரது மகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி விஜயசாந்தியாகவே மாறியிருக்கிறார்.
அவர் அடிப்பது வலிக்குமா வலிக்கா தெரியாது ஆனால் அவரது ஆக்சன் ஈடுபாடு கண்டிப்பாக அவருக்கு அப்ளாஸ் பெற்று தரும்.

சேலை கட்டிக்கொண்டு குடும்பமாக வரும் அபிராமி இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் அப்ராணியாக இருக்கிறார் திடீரென்று அவரும் கராத்தே ஸ்டெப் வைத்ததும் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இவர்கள் மூன்று பேரை தவிர இன்னொரு கராத்தே நபரும் இருக்கிறார் அவர் யார் என்று படத்தில் பாருங்கள்.

படத்தில் கார்ப்பரேட் கூட்டம், போலீஸ் ரவுடி போன்ற பாத்திரங்களில் நடித்திருக்கும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் தங்களது வேலையை பக்காவாக செய்து முடிக்கிறார்கள்.

கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி ஐஸ்வர்யா கல்பாத்தி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்

ஆக்சன் காட்சிகளுக்கு கூடுதல் பவர் தரும் வகையில் பவர் இசை அமைத்திருக்கிறார் ரவி பசுரூர்.

அருண் ராதாகிருஷ்ணன் கேமரா கைகொடுத்திருக்கிறது.

இயக்குனர் சுபாஷ் கே ராஜ் கமர்சியல் அதிரடி ஆக்சன் டைரக்டர் என்ற பெயரை ஒரே படத்தில் தட்டி தூக்கி இருக்கிறார்.

பிளாஸ்ட் – ஆக்சன் அதிர்வேட்டு.

Review By

K. Jayachandhiran

Trending cinemas now.com

Related posts

பிரபாஸின் ’ராதே ஷியாம்” ‘ரேகைகள்’ புதிய பாடல் போஸ்டர்

Jai Chandran

Engada Iruthinga Ivvalavu Naala

Jai Chandran

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ; கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend