Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் ரசிகர்கள் தவறு செய்தால்.. – ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் கார்டனில் பத்திரிக்கை, மீடியா நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் எழுந்தன. அது தொடர்பாக ஊடகத்தினரை சந்தித்து விளக்கம் தர வேண்டும் என கருதினேன். ஆனால் சந்திக்க முடியவில்லை. அதனால் உங்கள் எல்லோரையும் இப்போது சந்தித்துள்ளேன்.

தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நான் ஸ்டாலின் சாரை சந்தித்தேன். அது கொஞ்சம் விமர்சனத்துக்கு உள்ளானது. ஸ்டாலின் சாருக்கும் எனக்கும் இடையிலான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் எனது 38 ஆண்டு கால நண்பர். ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம். இருந்தாலும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்தது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் நண்பர் என்ற முறையில் அவரைச் சென்று பார்த்தேன்.

விஜய் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கு எனது வாழ்த்துகள்.

நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று விவரத்தை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளேன். எனது ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளில் இணைந்து பயணிக்கலாம் என நான் ஏற்கெனவே சொல்லி உள்ளேன். திரைத்துறையில் இழப்பு என்பது தயாரிப்பாளரை மட்டுமே பாதிக்கும். ஆனால், அரசியல் அப்படி அல்ல. அதன் பொறுப்பு மிகப்பெரியது.

கமல் உட்பட சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் அவரை (விஜய்) சந்தித்துள்ளனர். நான் சம்பிரதாயத்துக்காக சென்று சந்திப்பவன் அல்ல. அவர் மீதான எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேற்றுவார் என எனக்கு நம்பிக்கை உண்டு. அவருக்கு இரண்டு ஆண்டுகளாவது அவகாசம் கொடுக்க வேண்டும். அவரது தொண்டர்கள் மிகக் கவனமாக செயல்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் செய்யும் தவறு விஜய்யை தான் பாதிக்கும்.

அறுபது ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சினிமா புகழ், இளைஞர்கள், மகளிர் கொண்டு வந்துள்ள மாற்றம் இது.

விஜய் ரசிகர்கள் தவறு செய்தால் அது விஜயைத்தான் பாதிக்கும்  அவர்கள் தவறு செய்தால் உடனே அந்த தகவல் விஜக்கு தெரிவிக்க வேண்டும்

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்

 

 

Related posts

எம் எக்ஸ் பிளேயரில் வெளியாகும் ‘குருதிக்களம்’ வெப் தொடரில் பிரபல ஸ்டார்கள்..

Jai Chandran

இளையராஜா வெளியிட்ட மதுரைமணிக்குறவன் பாடல்..

Jai Chandran

ஆர். கண்ணன் இயக்கத்தில் மீண்டும உருவாகும் காசேதான் கடவுளடா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend