Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காக்கி சர்க்கஸ் (வெப் சீரிஸ் விமர்சனம் )

படம் (வெப் சீரிஸ் ): காக்கி சர்க்கஸ

நடிப்பு : முனிஷ்காந்த், ராஜேஷ் மாதவன், கௌதமி நாயர், வின்சு ராட்சி , சாவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, ராகேஷ், அருண்குமார்

தயாரிப்பு: ஸ்ரீநிதி சாகர்

இசை: விபின் பாஸ்கர்

ஒளிப்பதிவு: நீரஜ் ரவி

இயக்கம்: அமீன் பரரீஃப்

பிஆர்ஓ : சதிஷ் (AIM )

ரிலீஸ்: ZEE 5 OTT தளம்

வெளியில் திருடும் திருடர்களை சிறையில் அடைப்பார்கள் ஆனால் சிறையிலேயே ஒரு திருட்டு நடக்கிறது. அதை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்ற கருவை மையமாக வைத்து காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் உருவாகி இருக்கிறது.

சிறை கண்காணிப்பாளர் முனீஸ் காந்த். புத்தகங்கள் எழுதும் எழுத்தாளர். சிறையில் கைதிகள் புத்தகங்களை படித்தால் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் தான் எழுதிய புத்தகங்களை தந்து படிக்க வைக்கிறார். அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொள்கிறார். ஆனால் அதே சிறையில் காவலராக இருக்கும் சுபாஷ் செல்வம் திருடர்களுக்கு அவர்களின் திருட்டுக்கு ஏற்ற தண்டனையை கொடுத்தால் தான் திருந்துவார்கள் என்ற கண்டிப்பு குணம் கொண்டவர். இந்நிலையில் சப் ஜெயிலில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உண்டியலில் லட்சக்கணக்கான பணம் திருட்டு போகிறது. இது போலீஸ் துறைக்கு அதிர்ச்சி அளிக்க, திருடியவர்கள் யார் என்பதை தேடும் பரபரப்பு வேலை தொடங்குகிறது. இதன் முடிவு என்ன என்பதை பரபரப்பாகவும் கலகலப்பாகவும் காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் சொல்கிறது.

காமெடி நடிகராக வலம் வரும் முனீஸ் காந்த் அவ்வப்போது கதை நாயகன் வேடங்களையும் ஏற்று தனது குணச்சித்திர நடிப்பால் தனக்கான ஒரு இடத்தையும் பிடித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸில் சிறை கண்காணிப்பாளராக வருவதோடு மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளராகவும் அவர் நடித்திருப்பது முற்றிலும் வித்தியாசமானது.

திருடர்களுக்கு அன்பு காட்டி அவர்களை புத்தக புழுவாக மாற்றினால் அவர்களின் கெட்ட எண்ணம் மாறி திருந்துவார்கள் என்பது முனிஸ் காந்தியின் எண்ணம் அதற்காக ஒரு நூலகத்தையே சிறைக்குள் அமைத்து வைத்து விடுகிறார். அதைப் படித்து திருடர்கள் திருந்தினார்களா என்பதை வெப் சீரிஸ் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் அன்பாக சொன்னால் திருடர்களிடம் உண்மை வரவழைக்க முடியாது என்று கோபப்படும் போலீஸ் சுபாஷ் செல்வம் முறைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க பாய்வதும், முனீஸ் காந்தியின் தடுப்பு நடவடிக்கையால் திருடனை பிடிக்க முடியாமல் ஏமாறுவதுமாக டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு நடக்கிறது. இந்த விளையாட்டு, வெப் தொடரை நகைச்சுவை சக்கரத்தில் கட்டி இழுத்துச் செல்கிறது.

திருடன் போலீஸ் கதை என்று மட்டுமே நகராமல் கொஞ்சம் காதலையும் திரைக்கதையில் இணைத்து சுவாரஸ்யமூட்ட பார்த்திருக்கிறார் இயக்குனர்.

ராஜேஷ் மாதவன், கௌதமி, வின்சு ராட்சி, சாவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, ராகேஷ், அருண்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தமிழ்நாடு கேரளா பார்டரில் நடக்கும் கதையாக இருப்பதால் பேச்சிலும், திரைக்கதையிலும் மலையாள வாடை வீசுகிறது.

ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கிறார். விபின் பாஸ்கர் இசை, நீரஜ் ரவி கேமரா இயல்பாக நகர கை கொடுத்திருக்கிறது

ஓடிடி தளத்துக்கு சிறை கதை களத்தை கையாண்டு நகைச்சுவையுடன் கூடிய ஒரு சீரிசை பார்த்த உணர்வு தந்திருக்கிறார் இயக்குனர் அமீன் பரரீஃப்.

காக்கி சர்க்கஸ் – காமெடியாக பொழுதை நகர்த்தும்.

ஏழு எபிசோட் கொண்ட காக்கி சர்க்கஸ் zee5 ஓ டி டி தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து
வருகிறது.

Review By
K Jayachandhiran
trending cinemas now.com

 

Related posts

இயக்குனர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு..

Jai Chandran

‘Yaathisai’ Director Dharani Rasendran’s next movie

Jai Chandran

Valimai First Single 2.5 Million Views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend