Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சொட்ட சொட்ட நனையுது (பட விமர்சனம்)

படம்: சொட்ட சொட்ட நனையுது

நடிப்பு: நிஷாந்த் ரூஷோ, பிக்பாஸ் வர்ஷிணி, ஷாலினி.

தயாரிப்பு அட்லர் என்டர்டெயின்மென்ட்

இசை: ரெஞ்சித் உன்னி

ஒளிப்பதிவு: ரயீஷ்

இயக்கம்: நவீத் S ஃபரீத் (Debut)

பிஆர்ஓ: ராஜா

சொட்டை தலையுடன் இருக்கும் வாலிபர் ராஜா (நிஷாந்த் ரூஷோ) திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் தவிக்கிறார். ஆனாலும்  எதிர் வீட்டுப் பெண் பிரியா (வர்ஷிணி) ராஜாவை திருமணம் செய்ய சம்மதிக்கிறார். திடீரென தனக்கு வரும் வீடியோவில் பிரியா வேறு ஒருவனை கட்டிப் பிடித்திருப்பது போல் வரும் காட்சியைக் கண்டு அவரை  மணக்க மறுக்கிறார். பின்னர் தலை  முடி வளர்வதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு ஹேர் ஸ்டைலுடன் வரும் ராஜா இன்ஸ்டாகிராம் பிரபலமான சுருதியை (ஷாலினி) மணக்க முடிவு செய்கிறார். ஆனாலும் ராஜாவின்  சொட்டை கதை சுருதிக்கு தெரிய வர அவர் ராஜாவை வெறுக்கிறார். இந்த இழுபறி எங்கு சென்று முடிகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

வளர்ந்து வரும் ஹீரோ நிஷாந்த் ரூஷோ சொட்டை தலையுடன் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயம் தான். ஹீரோ என்றால் ஸ்டைலாக  4 ஃபைட், 4 டூயட் என்று எதிர்பார்ப்பார்கள் ஆனால் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிஷாந்திடம் தெரிகிறது

சொட்டை தலையாக இருப்பது அவ்வளவு பாவமா என்று கேட்கும் அளவுக்கு அவருக்கு தரும் பில்டப் கொஞ்சம் ஓவர் தான். கேட்டால் சொட்டைத்தலை உள்ளவர்களுக்கு மட்டும்தான் தெரியும் சொட்டை என்பது கெட்ட வார்த்தை என்று  என பதில் சொல்வார்கள்.

சொட்டை தலை உள்ளவர்கள் அறிவு மிகுதி உள்ளவர்கள் என்ற ஒரு  பேச்சு கூட இருக்கிறது என்பதை இயக்குனர் மறந்துவிட்டாரோ என்னவோ?

நிஷாந்த்  தனது பாத்திரத்தை நேர்த்தியாக நடித்து பூர்த்தி செய்திருக்கிறார். ஏதோ ஒரு வீடியோவை பார்த்துவிட்டு தன்னை மணக்க முன்வந்த வர்ஷினியை நிஷாந்த் திட்டி தீர்க்கும் போது கொஞ்சம் கோபம் கொப்பளிக்கதான் செய்கிறது.

ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு வரும் நிஷாந்த் இன்னொரு பெண் ஷாலினியை மணக்க முடிவு செய்வதும். ஆனால் அவரோ  இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதில் குறியாக இருப்பது தற்கால சிட்டுக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

ரோபோ சங்கர், கலக்கப்போவது யாரு புகழ் ராஜா சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு இசையமைத்த ரெஞ்சித் உன்னி இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.  ரயீஷ் பளிச்சென ஒளிப்பதிவு செய்துள்ளார்.

புது இயக்குனர் நவீத் எஸ் ஃபரீத் சொட்டைத் தலை விஷயத்தை சீரியசாக்கி படத்தை இயக்கி  உள்ளார். சொட்டைத்தலை உள்ளவர்களுக்கு ஆறுதல் சொல்லும் படமாக இருந்தாலும் அதை இன்னும் கூட சுவைபட சொல்லி கலக்கல் காமெடி படமாக இயக்கியிருந்தால் வரவேற்பு பெற்றிருக்கும். ஆனால் ஒன்று, சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லி இருக்கிறார். இயக்குனரின்  அந்த நேர்மை  பிடித்திருக்கிறது.

சொட்ட சொட்ட நனையுது- முழுசாக நனையவில்லை.

By

K Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

Related posts

உயிரே போனாலும் கொடுத்த வாக்கிலிருந்து தவறமாட்டேன் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி..

Jai Chandran

பிரியா ஆனந்த் திறந்த டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர்..

Jai Chandran

சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ பட டைட்டில் டீசர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend