Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கார் மேனி செல்வம் (பட விமர்சனம்)

படம் :கார் மேனி செல்வம

நடிப்பு: சமுத்திரக்கனி, கௌதம் மேனன், லட்சுமி பிரியா, கரன் சக்கரவர்த்தி, அபிநயா, படவா கோபி, கார்த்திக் குமார், கோதண்டன், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா பறக்கோட், பேபி கே லயா

தயாரிப்பு: அருண் ரங்கராஜுலு

இசை: சர்வீஸ் மியூசிக்கிளவுட் ஸ்டுடியோ அண்டு டெக்னாலஜி

ஒளிப்பதிவு : யுவராஜ் தக்ஷன்

இயக்கம் : ராம் சக்ரி

பிஆர்ஓ : நிகில் முருகன்

கடற்கரை குடிசை பகுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசிக்கிறார் செல்வம் (சமுத்திரக்கனி ). வீடு கட்ட வேண்டும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது இவர்களது கனவு. தொழில் அதிபர் சம்பத்திடம் (கௌதம் மேனன் ) கார் டிரைவராக பணியாற்றுகிறார் செல்வம். ஒரு சமயம் சம்பத் வெளிநாடு செல்ல அவரது காரை தனது தேவைக்காக வாடகைக்காராக செல்வம் பயன்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் சம்பத் திரும்பி வர அவர் செல்வம் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார்? செல்வத்தின் ஆசை எல்லாம் நிறைவேறியதா? என்பதற்கு உருக்கமாக பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

கார் ஓட்டுனர் செல்வமாக சமுத்திரக்கனி, தொழில் அதிபராக கௌதம் மேனன் என இரண்டு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் இயக்குனர். அவர்களும் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரங்களை செம்மைப்படுத்தியிருக்கிறார்கள்
முதலாளி கௌதம் மேனனுக்கு தெரியாமல் அவரது காரை ஒரு வாடகை டாக்ஸி போல் சமுத்திரக்கனி பயன்படுத்தும்போது நியாயமாக சமுத்திரக்கனி மீது கோபம் வர வேண்டும் ஆனால் அவரது சூழல் அந்த சூழலை வெளிப்படுத்திய விதம் போன்றவற்றால் சமுத்திரக்கனி கதாபாத்திரம் மீது இரக்கம்தான் வருகிறது.

தனது மனைவி குழந்தையை பார்க்க டாக்ஸியில் வரும் சமுத்திரக்கனியிடம், டாக்ஸி டிரைவர் கூடுதல் பணம் கேட்டும் கோபப்படாமல் அதை தந்து விட்டு வாழ்க்கையின் தத்துவத்தை அவருக்கு புரிய வைக்கும் போது ஊதாரித்தன பேர்வழிகளுக்கு சவுக்கடி தருகிறார் சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனி மனைவியாக லட்சுமி பிரியா எதார்த்தமான நடிப்பில் மனதில் பதிகிறார். சராசரி ஒரு குடும்ப பெண்ணாக மற்றவர்கள் முன் சொந்த வீடு கட்டி வாழ வேண்டும் என்று ஆசைப்படும் லட்சுமி பிரியாவின் கதாபாத்திரத்தில் ஒரு ஏழை பெண்ணின் கனவை கண்முன் பிரதிபலிக்கிறது.

தொழிலதிபராக வரும் கௌதம் மேனன் கனக்கச்சிதமாக பாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார்.
தனது காரை சமுத்திரக்கனி டாக்ஸியாக பயன்படுத்தினார் என்பது தெரிந்தால் கவுதமன் என்ன முடிவு எடுப்பாரோ என்ற ஒரு பரபரப்பு கிளைமாக்கில் தொற்றிக் கொள்கிறது.

கரன் சக்கரவர்த்தி, அபிநயா, படவா கோபி, கார்த்திக் குமார், கோதண்டன், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா பறக்கோட், பேபி கே லயா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.
சர்வீஸ் மியூசிக்கிளவுட் ஸ்டுடியோ அண்டு டெக்னாலஜி மிகை இல்லாத இசையால் காட்சிகளில் கவனம் செலுத்த முடிகிறது.
அதேபோல் ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன் தனது பங்ககை நிறைவு செய்கிறார்

முதலாளிக்கும் தொழிலாளிக்குமான ஒரு உறவை இப்படி மனமுருக கூட சொல்லலாம் என்பதை உணர்வுபூர்வமான காட்சிகள் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ராம் சக்ரி.

கார் மேனி செல்வம் – கருணைக்கொடை.

Review by
K Jayachandhiran
trending cinemas now. com

 

Related posts

Luck illa maamey – a fun video song*

Jai Chandran

Actress Kajal Aggarwal’s ‘Ghosty’ shooting wraps up with promo song

Jai Chandran

திருப்பதியில் வேண்டுதலை நிறைவேற்றிய விஷால்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend