Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி வி. பிரகாஷ் குமார், காயத்திரி படம் தொடக்கம்

Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கும் திரைப்படம், “Production No.2” இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி சங்கர் பூஜையுடன் துவங்கியது !

தமிழ் திரையுலகில் சிறப்பான படைப்புகளை, தயாரித்து வரும் Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் இன்று (ஆகஸ்ட் 2, 2021) தனது நிறுனத்ததின் அடுத்த தயாரிப்பான “Production No.2” படத்தினை துவங்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், காயத்ரி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தினை இயக்குகிறார். இன்று காலை ஆண்டிபட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் எளிமையான விழாவுடன், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் முதல் காட்சிக்காக கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.

Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறும்போது …
எங்கள் நிறுவனத்தின் “Production No.2” கடவுளின் அருளுடன் நல்ல நாளில் துவங்குவது மிகுந்த மகிழ்ச்சி. தேசிய விருதை வென்ற இயக்குநர் சீனு ராமசாமி போன்ற ஆளுமையாளருடனும், திறமை மிகுந்த ஒரு குழுவுடனும் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள், தனது திரைப்படங்களின் இயல்பான தன்மை மற்றும் யதார்த்தத்தின் சாரத்திற்காக இந்திய அளவில் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர். இந்த திரைப்படத்தில் சிறந்த கதைகளில் நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் இடம்பெற்றிருப்பது, இந்த ஆக்சன் திரில்லர் திரைப்படத்திற்கு பெரிய பலம். நடிகை காயத்ரி, அவர் பணிபுரியும் ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்து வருகிறார். இந்த படத்திலும் அவரது பங்கு சிறப்பானதாக இருக்கும். முதல் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 25 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய தொற்றுநோய் சூழலில், சுகாதார நெறிமுறைகளை , படப்பிடிப்பில் நாங்கள் முறையாக பின்பற்றுகிறோம். இத்திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால் அவர்கள் கிராமப்புற பின்னணியில் ஒரு திரில்லரை முதன்முறையாக இப்படத்தில் காணப்போகிறார்கள் என்றார்.

மேலும் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறுகையில், “ஒரு தயாரிப்பாளராக, என் வேலை படத்திற்கான நிதியை மட்டும் வழங்குவது அல்ல. ஒரு திரைக்தையின் இறுதி வடிவம் மிகச் சிறந்ததாக இருக்கிறதா, என்பதை உறுதி செய்வதில் உள்ளது என நான் எப்போதும் நம்புகிறேன். அதே நேரம் திரைப்பட இயக்குநர்களின் படைப்பு சுதந்திரத்தில் நான் எப்போதும் தலையிடுவதில்லை. அவர்களின் திரைக்கதை முழுமை அடைய, அத்தியாவசிய தேவையான சுதந்திரமும், இடமும் அவர்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்து விடுவேன். தவிர, எந்தவொரு தயாரிப்பாளருக்கும், படப்பிடிப்பு கட்டம் மிகவும் முக்கியமானது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. படப்பிடிப்பு தளத்தில் அனைத்தும் சீராக நடைபெற என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தை வெளியிடும் கட்டத்தில் அதனை சந்தைப்படுத்துவது மற்றும் விளம்பரப்படுத்துவது ஒரு பெரிய சவாலாகும். இது நிறைய ஆற்றலையும் திறந்த மனதையும் கோரும் கடும் பணி. ஒவ்வொரு திரைப்படத்திலும் இந்த அம்சங்களை நான் கற்றுக்கொண்டே வருகிறேன். அதனை ஒவ்வொரு படத்திலும் மேம்படுத்தி வருகிறேன். அதனால் நான் தயாரிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும். தற்போது, ​​முகேன் ராவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “வேலன்” வெளியீட்டை ஒட்டி அதற்கான பணிகளை செய்து வருகிறோம். எங்கள் நிறுவனம் சார்பில் நாங்கள் மேலும் இரண்டு திரைக்கதைகளை இறுதி செய்துள்ளோம், விரைவில் அவற்றை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்றார்.

என் ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.

Related posts

One 2 One Kick Started Today with Pooja

Jai Chandran

காமராஜ் – 2 பட படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

Jai Chandran

Dir Ashwath, Dir Pradeep got their second job done

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend