Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஓ பட்டர்பிளை (பட விமர்சனம் )

படம்: ஓ பட்டர்பிளை

நடிப்பு: அதுல், சிபி சந்திரன், நிவேதிதா, லட்சுமி பிரியா, கீதா கைலாசம், நாசர்

தயாரிப்பு: வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல்

இசை: வைசாக் சோமநாத்

ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன்

இயக்கம்: விஜய் ரங்கநாதன்

பிஆர்ஓ : ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்

நிவேதிதா, அதுல் தம்பதிகள் ஹனிமூனுக்கு வெளியூர் செல்கின்றனர். சென்ற இடத்தில் நிவேதிதாவின் முன்னாள் காதலன் சிபி சந்திரன் வருகிறார். முன்னாள் காதலனை கண்டதும் நிவேதிதா அதிர்ச்சி அடைகிறார். கணவன் மற்றும் முன்னாள் காதலன் இடையே சிக்கித் தவிக்கும் நிவேதிதா என்ன முடிவு எடுக்கிறார்? கணவன், முன்னாள் காதலன் செய்தது என்ன? நிவேதிதா மனம் மாறுகிறாரா என்ற பல்வேறு கேள்விகளுக்கு பெருமூச்சியை விட வைக்கும் பதில்  அளிக்கிறது ஓ பட்டர்பிளை .

கேப்டன் மில்லர் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நிவேதிதா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் படம் ஓ பட்டர்பிளை. வந்தோமா ஜாலியாக டூயட் பாடினோமா சென்றமா என்ற கதாபாத்திரமாக இல்லாமல் மனதையும் உணர்வுகளையும் ஒன்றாக பிழிந்தெடுத்து நடிக்க வேண்டிய கடினமான பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் நிவேதிதா. இது போன்ற கதாபாத்திரங்களை இப்போது ஏற்று நடிக்க நிறைய நடிகைகள் இல்லை. ஷோபனா, ரேவதி,, அர்ச்சனா போன்ற நடிகைகள் இது போன்ற கனமான பாத்திரங்களை முன்பு ஏற்று நடித்து வந்தனர். கனமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கான நடிகைகள் பற்றாக்குறை தற்போது நிலவுகிறது. அந்த இடத்தை நிரப்பும் நடிகையாக கண்முன் நிற்கிறார் நிவேதிதா.

நிவேதிதா கணவராக நடித்திருக்கும் அதுல் தமிழுக்கு புதுமுகமாக இருந்தாலும் நடிப்பில் கை தேர்ந்தவர் என்பதை நிரூபிக்கிறார். வேலை இல்லாத விரக்தி, திருமணமாகி இரண்டு வருடம் ஆகியும் மனைவி மீது கை படாத அவலம், கடைசியில் நண்பனும், மனைவியும் சேர்ந்து செய்த துரோகம் என்று எதிர்மறை சம்பவம் எதிர்கொள்ளும் அதுல் நடிப்பில் மனதை தொடுகிறார்.

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்த சிபி சந்திரன் மெல்ல மெல்ல படங்களில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு நெகடிவ் கதாபாத்திரம் அதாவது நிவேதிதாவின் முன்னாள் காதலனாக நடித்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்.

பட்டாம்பூச்சிக்கு கூட பெயர் வைத்து அழைக்கும் நாசரின் வித்தியாசமான நடிப்பும், சன்னியாசியாக வரும் லட்சுமி பிரியாவின் அட்வைஸும் மனதை லேசாக்குகிறது. கௌரவ வேடத்தில் வந்தாலும் கைரேகை பாட்டி கீதா கைலாசம் மனதில் இடம் பிடிக்கிறார்.

ஓ பட்டர்பிளை படம் சைக்காலஜிக்கல் திரில்லர் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை உணர்த்தும் விதமாக காட்சிகளையும் நடிப்பையும் ஒருங்கே அமைத்து ஒரு மாறுபட்ட படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் விஜய் ரங்கநாதன்

வைசாக் சோமநாத் இசை,,
வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு தமிழில் ஒரு மலையாள படத்தை பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.

ஓ பட்டர்பிளை – வித்தியாசமான கதைக்களம்

 

Review by

க் Jayachandhiran

Trendong cinemas now.com

Related posts

கார்த்திக் தாஸ் இயக்கி நடிக்கும், ‘வரிசி’ பட ஆடியோ ரிலீஸ்..

Jai Chandran

கட்டில் (பட விமர்சனம்)

Jai Chandran

Venom: Let There Be Carnage this Dusshera

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend