Trending Cinemas Now
தமிழ் செய்திகள் விமர்சனம்

வடம் (பட விமர்சனம்)

படம் : வடம்

நப்டிப்பு  : விமல் ,நடராஜ், சனக்ஷா ஸ்ரீ, முனிஷ்காந்த், நரேன், இந்துமதி, பால சரவணன், மது சூதனன், தீபா சங்கர்

தயாரிப்பு: ராஜசேகர் ஆர்

இசை: டி இமான்

ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ் குமார்

இயக்கம்: கேந்திரன் வி
பிஆர்ஓ : சதீஷ் (S 2)

சிறுவயதிலிருந்து காளை மாடு பாண்டி முனியை அன்பாக வளர்க்கிறார் வெற்றிவேல் (விமல்). வட மாடு போட்டியில் பாண்டி முனி ஜெயிப்பதை கண்டு பொறாமை கொள்ளும் ரத்தினவேல் (நட்டி ) அந்த மாட்டை தனக்கு தரும்படி வெற்றிவேலிடம் கேட்கிறார். அதற்கு வெற்றிவேல் மறுத்து விட ரத்தினவேல் காண்டாகிறார். ஒரு கட்டத்தில் வெற்றிவேலையும், பாண்டி முனியையும் கொல்ல ரவுடி கூட்டம் சுற்றி வருகிறது. அடுத்து நடந்தது என்ன? என்பதற்கு நிறைய சஸ்பென்ஸ்கள் உள்ளடக்கி பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

வழக்கமாக காதல் என்றாலும், காமெடி என்றாலும் எதார்த்தமாகவே நடித்து பழக்கப்பட்டவர் விமல். அவரை இப்படத்தில் ஆக்சன் ஹீரோவாக மாற்ற முயற்சித்திருக்கிறார இயக்குனர். தானும் அதற்கு பொருத்தமான ஆள்தான் என்பது போல் ஆக்ஷன் காட்சிகளில் பரபரக்க செய்கிறார் விமல்.

வட மாடு மைதானத்தில் விமல் காளையை அடக்காவிட்டாலும் தான் வளர்த்த பாண்டி முனி காளையை களத்தில் இறக்கி அதை உற்சாகப்படுத்தும் வகையில் விசில் அடித்தும், துள்ளி குதித்தும் ரவுசு செய்வது உற்சாக காட்சிகள்.

விமல் – ஷனாக்ஷா காதல் காட்சி பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் செல்கிறது என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அதிலும் ஒரு டிவிஸ்ட் வைத்திருப்பது கதையை திருப்புமுனை ஆக்குகிறது

நட்டி காளைகளை வளர்க்கும் ஆர்வம் உள்ளவராக வருகிறார். விமல் குடும்பத்திற்கும் நட்டி குடும்பத்திற்கும் ஒருவித மோதல் போக்கு இருப்பது கதையை அண்டர் கரண்டில் விறுவிறுப்பாக்குகிறது.

முனீஸ் காந்த் எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். நரேன், இந்துமதி, பால சரவணன், மது சூதனன், தீபா சங்கர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ராஜசேகர் ஆர் படத்தை தயாரித்திருக்கிறார்

காட்சிகளில் சிறு அசைவுக்கும் அதிரடி இசையமைத்து பரபரப்பான காட்சிகளாக மாற்றி இருக்கிறார் இசையமைப்பாளர்.டி இமான்

செம்மண் மைதானத்தில் வட மாடு களத்தை கலர்ஃபுல்லாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்
பிரசன்னா எஸ் குமார்.

ஜல்லிக்கட்டு போட்டியிலி
ருந்து வேறுபட்டு வடமாடு போட்டிக் களத்தை புதிய வடிவில் கமர்சியல் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் கேந்திரன் வி.

வடம் – விமலின் ஆக்சன் படம்.

Review By
K. Jayachandhiran
trending cinemas now. com
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Related posts

”மட்டி” சர்வதேச அளவில் பேசப்படும் பிரமாண்ட ஆக்‌ஷன் படம்: திரையுலகினர் பாராட்டு

Jai Chandran

உலகெங்கும் டான் படம் வெளியிடும் ஐபிக்ஸ்

Jai Chandran

வடிவேலுடன் பல படங்களில் நடித்த நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend