Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரசு விருது பெற்ற கார்த்தி, விக்ரம் பிரபு, அர்ஜுன்தாஸ்..

தமிழ்த் திரையுலகில் சிறந்த படைப்புகளை ஊக்குவித்து, நடிகர்-நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருது’-களை  வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் உருவான திரைப்படங்களுக்காக விருது பெற்ற, நடிகர்கள் கார்த்தி, விக்ரம் பிரபு , அர்ஜுன் தாஸ், போஸ் வெங்கட், கருணாகரன், குரு சோமசுந்தரம், இயக்குநர்கள் எச்.வினோத், லோகேஷ் கனகராஜ், ராஜூ முருகன், தமிழ் , அருண் பிரபு

புருஷோத்தமன், சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் திலீப் சுப்பராயன், அன்பறிவு, பாடலாசிரியர் கபிலன், விவேக், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகைகள் அதிதி பாலன், மதுமிதா, பேபி ஸ்மிர்தி, பின்னணி குரல் தீபா வெங்கட், ஆடை வடிவமைப்பாளர் பல்லவி சிங், உடைகள் செல்வம், ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு  எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு (ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்)

எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், ஆர்.தங்க பிரபாகரன் (பொட்டென்சியல் ஸ்டுடியோஸ்) தெரிவித்துள்ளனர்.

Related posts

மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு ஐசரி கே கணேஷ் இலவச.உணவு

Jai Chandran

தமிழ்நாடு என்னை தத்தெடுத்தது: எல் ஜி எம் பட விழாவில் தோனி நெகிழ்ச்சி

Jai Chandran

பூமாதேவிக்கே லஞ்சம் கொடுக்கிறார்கள்: விஷால்.குமுறல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend