படம்: கூலி
நடிப்பு: ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவ்பின் சாஹிர், ஆமீர்கான், ஸ்ருதி ஹாசன், பிரபா மோனிகா, கண்ணா ரவி, மோனிஷா பிளஸ்சி, காளி வெங்கட், மாறன், சார்லி, ஐயப்பா பி ஷர்மா, ரட்சிதா ராம், திலீபன், தமிழ், ரிஷிகா, ஜூனியர் எம் ஜி ஆர், பூஜா ஹெக்டே (கெஸ்ட் ரோல்)
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: கிரிஷ் கங்காதரன்
இயக்கம்: லோகேஷ் கனகராஜ்
பிஆர்ஓ: ரியாஸ் கே அஹமத், பாரஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலருக்கு வந்து 50-வது வருட படமாக வெளிவந்திருக்கிறது கூலி திரைப்படம். முதலில் அதற்காக சூப்பர் ஸ்டாருக்கு ஒரு வாழ்த்துக்களை சொல்வோம்.
கூலி கதை:
சென்னையில் தேவா மென்ஷன் என்ற ஒரு விடுதி நடத்துகிறார் தேவா (ரஜினிகாந்த்). அவரது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) மாரடைப்பில் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தேவா விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அங்கிருக்கும் ராஜசேகர் மகள் ப்ரீத்தி ( ஸ்ருதி ஹாசன்) ரஜினியை வீட்டை விட்டு செல்லுமாறு துரத்துகிறார். ஆனால் நண்பன் ராஜசேகரின் மூன்று மகள்கள் இப்போது ஆதரவு இல்லாமல் நிற்பதைக் கண்டு வருந்தும் தேவா அவர்களுக்கு துணையாக நிற்க எண்ணுகிறார். ஒரு கட்டத்தில் ராஜசேகரை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. நண்பனை கொன்றவனை பழிவாங்க முடிவு செய்து கொலையாளியை தேடி செல்கிறான் தேவா. அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் கதை.
ரஜினிகாந்த் நண்பராக நடிக்கிறேன் என்று கூலி பட விழாவில் சத்யராஜ் பேசும்போது கூறினார் அப்போதே இந்த படம் ஒரு நட்புக்கான படம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் மம்முட்டி ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்திற்கு இணையாக இருக்குமா என்று யாரும் யோசிக்கவில்லை.. கூலி படம் தளபதி படத்திற்கு இணையாக இருக்கிறதா என்று கேட்டால் அந்த நட்பு வேறு, இந்த நட்பு வேறு என்பது போல் தான் இருக்கிறது.
ரஜினியும் சத்யராஜும் ஏற்கனவே பல படங்களில் ஹீரோ வில்லனாக மோதிக் கொண்டவர்கள் என்பதால் கூலி படத்தில் அவர்களின் நட்பு வெறித்தனமாக வெளிப்பட போகிறது என்று எதிர்பார்ப்பு எகிறுகிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு திருப்தி தரவில்லை
சத்யராஜை கொன்றவனை கண்டு பிடிப்பதற்காக துறைமுகத்தில் கடத்தல் தலைவனாக இருந்து கடத்தல் வேலைகளை செய்யும் நாகார்ஜுனாவின் ஏரியாவுக்குள் ரஜினி நுழைந்ததும் அதிரி உதிரி ஆகப்போகிறது என்று எதிர்பார்ப்பு எகிறுகிறது. ஆனால் ஏன் அவசரம் பொறுமையாக கதையை கேளுங்கள் என்பது போல் காட்சிகள் நகர்கின்றன.
ஒரு கூலியாக ரஜினி நாகார்ஜூனிடம் வேலை செய்வார் என்று நினைத்தால் அது திசை மாறி பிணங்களை எரிக்கும் வேலையை ரஜினி செய்வது அதிர்ச்சி. இவ்வளவு ஒரு கொடூர வேலையை ரஜினியை செய்ய வைக்காமல் வேறுவித கதாபாத்திரத்தை ரஜினிக்கு தந்திருந்தால் கூடுதல் வலு சேர்த்திருக்கும்.
தளபதி படத்தில் மம்முட்டி சொல்வதை செய்யும் ஒரு தளபதியாக ரஜினி நடித்த காட்சிகள் இன்னும் கூட மனதை விட்டு அகலாமல் இருக்கிறது அது போன்ற ரஜினி கதாபாத்திரத்தை மாற்றி இருக்கலாம்.. இனி யோசனை சொல்லி பிரயோஜனமில்லை. ஏற்ற வேடத்தை ரஜினி எப்படி நடித்திருக்கிறார் என்று பார்த்தால் வழக்கம்போல் அவர் தூள் பறத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வேகம் காட்டியி ருக்கிறார்.
சைமன் கதாபாத்திரத்தில் அதிரடி ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருக்கிறார் நாகார்ஜூன்.
உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று அடிக்கடி ரஜினியை பார்த்து நாஜார்ஜூன் சொல்லும்போது அதற்கு பின்னால் ஒரு கதை ஒளிந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.
கிளைமாக்சில் ரஜினியும் நாகார்ஜுனும் மோதிக்கொள்ளும் காட்சி. அசத்தலாக படமாக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் நாகார்ஜுனா பெரிய ஹீரோ. ஆனால் அவர் ரஜினிக்கு வில்லனாக நடித்திருப்பதும் சண்டை காட்சியில் உருண்டும் புரண்டும் விழுந்தும் காயங்களைப் பற்றி கவலைப்படாமல் நடித்திருப்பதும் நாகார்ஜுனாவின் நேர்மையான நடிப்புக்கு சான்று.
உபேந்திரா சர்ப்ரைஸ் எண்ட்ரி தருகிறார். அமீர்கான் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் வருகிறார். பிரமாதப்படுத்த போகிறார் என்று பார்த்தால் அந்த பீடி கட்டை கொடு என்று உபேந்திராவிடமிருந்து வாங்கி வைத்துக்கொண்டு காமெடி செய்கிறார்.

ஸ்ருதிஹாசன், தான் கிளாமர் ஹீரோயின் மட்டுமல்ல கண்ணீர் விட்டு குணச்சித்திரமாக நடிக்க தெரிந்த நல்ல நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். ஸ்ருதியின் நடிப்பை கமல்ஹாசன் பார்த்தால் ஏற்கெனவே ரஜினி சொன்னது போல் அவரே அவரை உச்சி முகர்ந்து பாராட்டு வார்.
பூஜா ஹேக்டே மோனிகா பாடலுக்கு கவர்ச்சியாக ஆடிவிட்டு செல்கிறார்.
காளி வெங்கட், சார்லி, மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மலையாள நடிகர் சவ்பின் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்து யார் இந்த நடிகர் என கேட்க வைக்கிறார்.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தை தயாரித்திருக்கிறார்.
அனிருத் வழக்கம்போல் ரஜினி படத்துக்கு அதிரடி இசை அமைத்திருக்கிறார் ஆனால் ஜெய்லர் ரேஞ்சுக்கு பாடல்கள் கை கொடுக்குமா என்று தெரியவில்லை.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பான் இந்தியா படமாக இயக்க முற்பட்டிருக்கிறார். ஆனால் நிறைய பெரிய நட்சத்திரங்கள் இருப்பதால் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில் தடுமாறி இருக்கிறார்.
நான் லீனியர் எடிட்டிங் முறையில் கதை அமைக்கப்பட்டிருப்பதால் சில காட்சிகள் முன்னுக்கும் பின்னுக்கும் மாறி மாறி வருகிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
கிரிஷ் கங்காதரன் மிகையில்லாமல் காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கூலி – நண்பன் மகள் சென்டிமென்ட்டுடன் ரஜினியின் ஆக்சன் படம்.

By
Jayachandhiran k.
www.trendingcinemasnow.com
