Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ட்ரெண்டிங் (பட விமர்சனம்)

படம் ட்ரெண்டிங்

நடிப்பு: கலையரசன்,  பிரியங்கா, பிரேம்குமார், பெசன்ட் நகர் ரவி, வித்யா போர்ஜியா, ஷிவாண்யா

தயாரிப்பு: மீனாட்சி ஆனந்த்

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு: பிரவீன் பாலு

இயக்கம்: சிவராஜ்

பி ஆர்nஓ: சதீஷ் (AIM)

யூட்யூபில் கலையரசன் பிரியங்கா தம்பதிகள் நடன வீடியோ,  சமையல் வீடியோ என்று பல்வேறு வீடியோக்கள் போட்டு அதிக வியூஸ் பெற்று சம்பாதிக்கிறார்கள். அந்த சம்பாத்தியத்தை வைத்து  பெரிய பங்களா வாங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் வருமானம் நின்று போக ஈ எம் ஐ கட்ட முடியாமல், வாங்கிய  கடன் திருப்பித் தர முடியாமல் தவிக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து செல்போனில் கேம் ஷோவில் பங்கேற்றால் ரெண்டு கோடி கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி இருவரையும் கேம் ஷோவுக்குள் கொண்டு வருகிறது ஒரு மர்ம உருவம். அந்த கேம் ஷோவில் அவர்கள் ஜெயிக்க முடிந்ததா, அதில் பங்கேற்றதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை அதிர்ச்சி தரும் வகையில் கூறுகிறது படம்.

ஆன்லைன் மோசடி குறித்து பல்வேறு திரைப்படங்கள் வந்திருக்கின்றன. கேம் ஷோ பற்றிய படங்களும் வந்திருக்கின்றன அவற்றிலிருந்து ட்ரெண்டிங் சற்று வித்தியாசமான கதைக்களமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

கலையரசனும்,  மனைவி பிரியங்காவும் ஜோடியாக சேர்ந்து யூட்யூபில் வீடியோ  போட்டு  வலம்வரும் தொடக்க காட்சிகள் ஜாலியாக நகர்கின்றன. ஒரு கட்டத்தில் அவர்களது யூடியூப் சேனல் முடக்கப்பட்டதும் வருமானம் இன்றி திண்டாடும்போது இனி இவர்கள் என்ன செய்வார்களோ என்ற படபடப்பு தொற்றிக் கொள்கிறது.

மர்ம மனிதன் ஒருவன் செல்போனில் அழைத்து கலையரசன் பிரியங்கா இருவரையும் ரியாலிட்டி கேம் ஷோவுக்குள் கொண்டு வர இவர்கள் என்னவெல்லாம்  கஷ்டங்கள் அனுபவிக்கப் போகிறார்களோ என்ற இன்னொரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. சந்தோஷமாக  இருந்த கலையரசன் பிரியங்கா தம்பதி கேம் ஷோ விற்காக ஒருவரை ஒருவர் மோசடி செய்து ஜெயிக்க முயற்சிப்பதெல்லாம் அவர்களது இன்பமான வாழ்க்கையை சீர்குலைக்கும் காட்சிகளாக ஆகிப்போவது பலருக்கு சரியான பாடப் புகுத்தலாக இருக்கும்.

கலையரசன் பிரியங்கா இருவருக்குள் ஏற்படும் கருத்து மோதல்கள் எந்த எல்லைக்கு செல்கிறது என்பதை  படத்தில் பார்த்தால் தான் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அதை காட்சிகளாக விவரிப்பது ஸ்பாய்லர்  ஆகிவிடும்.

மேலும் பெசன்ட் நகர் ரவி, வித்யா போர்ஜியா, ஷிவாண்யா நடித்திருக்கிறார்கள்.

மீனாட்சி ஆனந்த் தயாரித்திருக்கிறார். சாம் சி எஸ் பின்னணி இசை வேகம் கூட்டுகிறது.

பிரவீன் பாலு ஒளிப்பதிவும் தெளிவு .

ட்ரெண்டிங் என்று டைட்டில் வைத்ததற்காக ஏதோ ஒரு அடல்ட் படத்தை எடுக்காமல் பலரும் யூடியூபில் தங்கள் மானம் மரியாதை மறந்து பணம் சம்பாதிப்பதற்காக எப்படி எல்லாம் தர குறைவாக ஈடுபடுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர் சிவராஜ். அதேசமயம் ரியாலிட்டி கேம் ஷோவுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் கிளைமாக்ஸ் அமைத்திருப்பது ஏற்புடையதல்ல. ஒரு படத்தையே ரியாலிட்டி ஷோவுக்காக பப்ளிசிட்டி செய்தது போல கிளைமாக்ஸ் இருப்பது ஒரு குடம் பாலில் துளி விஷம் கலந்த செயல்.

ட்ரெண்டிங் –  பட பார்க்கலாம் ஆனால் ஃபாலோ பண்ண கூடாது.

 

By   ஜெயச்சந்திரன் கே .

www.trendingcinemasnow.com

 

 

Related posts

மோகன்லால் பட பாடலை வெளியிட்ட கர்நாடக துணை முதல்வர்..

Jai Chandran

“I’ve been a huge Karthik Subbaraj fan” : Joju George on working in Jagame Thandhiram

Jai Chandran

Vijay’s Beast Team Wishes Cinematographer Jani

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend