Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

யாதும் அறியான் (பட விமர்சனம்)

படம்:யாதும் அறியான்

நடிப்பு: தினேஷ் (அறிமுகம்),  பிரானா, கே பி ஒய் ஆனந்த் பாண்டி,  ஷியாமல், அப்புகுட்டி,

தயாரிப்பு பிரேக்கிங் பாயிண்ட் பிச்சர்ஸ்

இசை: தர்மபிரகாஷ்

ஒளிப்பதிவு: எல் டி

இயக்கம்: கோபி

பிஆர்ஓ: தர்மதுரை, சுரேஷ் சுகு

தினேஷ் தனது கேர்ள் பிரண்ட் மற்றும் தனது நண்பர் மற்றும் அவரது கேர்ள் பிரண்ட் என நான்கு பேர் மலைப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஜாலியாக இருக்க செல்கிறார்கள்.  தினேஷ் கேர்ள் பிரண்ட் திடீரென்று  இறந்து விடுகிறார். அதை மறைப்பதற்காக தன்னுடன் வந்தவர்களை தினேஷ்  கொலை செய்கிறார். இந்த கொலைகளை தினேஷால் மறைக்க முடிந்ததா? ஆபத்தில் சிக்கிக் கொண்டாரா? எதனால் இந்த கொலைகள் நடக்கின்றன என்பதற்கு குழப்பமான பதிலாக சொல்கிறது கிளைமாக்ஸ்.

சமீப காலமாக படத்துக்கு படம் புதுமுக நடிகர்கள் அறிமுகம் ஆவது அதிகரித்துவிட்டது யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகிவிடலாம் ஆனால் திறமைதான் அவர்களை நிலை நிறுத்தும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதி. அந்த வகையில் இப்படத்தில் அறிமுகம் ஆகி இருக்கும் தினேஷ் எப்படி தனது இடத்தை தக்க வைக்கப் போகிறார் என்பது அடுத்தடுத்த படங்களில் தான் தெரியும்.

தினேஷ் இந்த படத்தின் முழு கதையையும் இயக்குனரிடம் கேட்டாரா? இல்லையா?  என்பது சந்தேகமாக உள்ளது. தனது கதாபாத்திரம் பயந்த சுபாவம் கொண்ட பாத்திரமா அல்லது சைக்கோ கில்லர் பாத்திரமா என்று தெரியாமல் இந்த சீனில் இப்படி நடியுங்கள் என்று இயக்குனர் சொன்னதை கேட்டு அப்படியே நடித்துவிட்டு சென்றிருக்கிறார். எதார்த்தமாக நடிக்க கற்றுக் கொள்வது முக்கியம்.

அப்புகுட்டி காட்டுப்பகுதி விடுதி மேனேஜராக நடித்திருக்கிறார்.  அவரது கதாபாத்திரத்தில் ஏதோ  டுவிஸ்ட் இருக்கும் என்று கடைசி வரை எதிர்பார்த்து  ஏமாற வேண்டியுள்ளது.

மேலும் பிரானா, கே பி ஒய் ஆனந்த் பாண்டி,  ஷியாமல், நடித்திருக்கிறார்கள். யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. தம்பி ராமையா கெஸ்ட் ரோலில் வந்து செல்கிறார். கிளைமாக்சில் அவர் ஒரு கதை சொல்கிறார் எதற்காக அந்த கதை  என்பது புரியவில்லை

இயக்குனர் கோபி நடிகர் விஜயின் ரசிகர் என்பதால் படத்தில் சில இடங்களில் பத்திரிக்கை போஸ்டரில் விஜயின் அறிவிப்பை காட்டி இருக்கிறார். அதெல்லாம் பலிக்குமா? கனவாக போகுமா ? என்பதெல்லாம் 2026ல் தெரியும். படத்தில் 2024 மற்றும் 2026 என்று ஒரு கான்செப்ட்டை சொல்கிறாரே தவிர இந்த படம் டைம் ட்ராவல் படமா என்பது விளக்கப்படவில்லை.

தர்மபிரகாஷ் இசையமைத்ததிருக்கிறார: எல் டி ஒளிப்பதிவு செய்துள்ளார் இரண்டிலும் ஸ்பெஷல்  இல்லை.

யாரும் அறியான் – எதுவும் புரியான்.

Two And A Half Star Rating Illustration Vector

 

 

 

 

Related posts

கல்கி 2898 AD (பட விமர்சனம்)

Jai Chandran

குடியை பற்றி வித்தியாசமான கோணத்தில் ‘குடிமகான்’

Jai Chandran

Actress Samantha Akkineni to launch First song from Thalaivi in all three languages

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend