படம்: 2k லவ் ஸ்டோரி
நடிப்பு: ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜ், லத்திகா பாலமுருகன், பால சரவணன், சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், ஆண்டனி பாக்யராஜ், ஜி பி முத்து, வினோதினி
தயாரிப்பு: விக்னேஷ் சுப்பிரமணியன்
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: டி. எஸ். ஆனந்த கிருஷ்ணா
இயக்கம்: சுசீந்திரன்
ரிலீஸ்: ஜி. தனஞ்ஜெயன்
பி ஆர் ஓ: சதீஷ் (AIM)
ஜெகவீர், மீனாட்சி இருவருமே பள்ளி பருவம் முதல் இணை பிரியாத நண்பர்கள். இளவட்ட வயது வந்த பின்னரும் அவர்கள் தங்கள் நட்பை புனிதமாக பாதுகாக்கிறார்கள். ஆனால் அதை தவறாக புரிந்து கொள்ளும் சிலர் இருவரையும் திருமணம் செய்து கொள்ள வற்பபுறுத்தினாலும் அவர்கள் மறுப்பதுடன் ஒரே வீட்டில் இருக்கும் அண்ணன், தங்கையை மணந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து ஒரே வீட்டில் இருக்கும் அண்ணன், தங்கையை தேடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அப்படி ஒரு குடும்பம் அமைய அவர்கள் வீட்டில் சம்பந்தம் செய்ய ஜெகவீர் , மீனாட்சி குடும்பத்துடன் செல்கின்றனர். இந்த திட்டம் நிறைவேறியதா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
வழக்கமான படங்கள் போல் அல்லாமல் சற்று வித்தியாசமான காதல் கதையை அதுவும் டு கே கிட்ஸ் காதல் கதையை இயக்கி இருக்கிறார் சுசீநதிரன்.
படத்தின் முதல் பாதி வரை யூத்களின் ரவுசாக செல்கிறது. ஜெகவீர், மீனாட்சி கூட்டணியில் இருக்கும் பால சரவணன் அடிக்கும் பஞ்ச் சிரிப்பலையை பொங்கச் செய்கிறது .
ஜெகவீர், மீனாட்சி இருவரும் நெருக்கமாக பழகுவதை பார்த்து உடன் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களே இருவரும் காதலிக்கிறார்கள் என்று எண்ணி அந்த ஜோடியின் திருமணத்துக்கு ஓகே சிக்னல் கொடுக்க அதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எப்படியும் கிளைமாக்சில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று முன்கூட்டியே செய்யும் கணிப்பு தவறா? சரியா என்பதை உறுதி செய்துகொள்ள கிளைமாக்ஸ் வரை காத்துக் கொண்டு இருப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கவே செய்கிறது .
ஜெகவீர், மீனாட்சி இருவருக்கும் திருமணம் நடக்குமா என்பது தெரிவதற்குள் கொத்துக்கொத்தான நகைச்சுவை காட்சிகளை சரம் சரமாக வெடிக்க வைத்திருக்கிறார் சுசீந்திரன் .
சிங்கம்புலி சக கோஷ்டிகளுடன் திருமண வீட்டில் புகுந்து செய்யும் கலாட்டாக்கள் பின்னர் அடி உதை பட்டு தலை தெறிக்க ஓடும் காட்சிகள் எல்லாமே வயிற்றை பதம் பார்க்கிறது.
சிங்கம்புலி கோஷ்டி ஒரு பக்கம் திருமணத்தை நிறுத்த உடன் இருக்கும் காமெடியன்களை ஏவிவிட்டு ஒவ்வொரு முறையும் மொக்கை வாங்குவதும் ஆனாலும் முகத்தை கழுவிக்கொண்டு மீண்டும் திருமண வீட்டில் அடிக்கும் லூட்டிகள் எல்லாமே காமெடி கூத்து.
ஜிபி முத்துவுக்கு பேண்ட் சட்டை மாட்டிவிட்டு யார்ரா இந்த புது காமெடியன் என்று யோசிக்க வைத்திருக்கிறார்கள். அவருக்கு ரெகுலர் காஸ்டியூமான வேஷ்டி சட்டையை போட்டு அவரது ஒரிஜினல் யூடியூப் டயலாக்கை பேச வைத்திருந்தால் கூடுதல் பிளாசாக இருந்திருக்கும்
2கே கிட்ஸ் ஆக வரும் பாலா சரவணன், 90ஸ் கிட்ஸாக வரும் ஆண்டனி பாக்யராஜை கலாய் கலாய் என்று கலாய்த்து தள்ளுகிறார்.
படத்தில் இயக்குனர் சுசீந்திரன் வைத்திருக்கும் சின்ன சின்ன டிவிஸ்டுகள் காட்சிகளை போர் அடிக்காமல் கொண்டு செல்கிறது.
படத்திற்கு பெரிதாக கை கொடுக்கிறது டி. இமான் இசை. பாடல்கள் எல்லாமே ரசிக்க முடியும் , கேட்க முடியும் , தாளம் போட வைக்கும்.
ஒளிப்பதிவாளர் ஆனந்த கிருஷ்ணா
கலர்ஃபுல்லாக ஒவ்வொரு காட்சியையும் ஓவியமாக தீட்டி வைத்திருக்கிறார்.
ஜி.தனஞ்ஜெயன் படத்தை வெளியிட்டுள்ளார்.
2k லவ் ஸ்டோரி – நட்பின் கற்பு.