Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூரி ஹீரோவாக நடிக்கும் மண்டாடி படம் தொடக்கம்

சூரி ஹீரோவாக நடிக்கும் மண்டாடி படம் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

காமெடி வேடங்களில் நடித்து வந்த சூரி  வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து விடுதலை2 கருடன், கொட்டுக்காளி படங்களில் ஹீரோவாக நடித்தார். இதைத் தொடர்ந்து விடுதலை பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இப்படத்தை வெற்றிமாறன் உதவியாளர்  மதிமாறன் இயக்குகிறார்.
மேலும் இப்படத்தில்  சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார்,, ரவீந்திர விஜய், சஞ்சனா நமிதாஸ், அச்யூத் குமார் உள்ளிட்ட பலர்  நடிக்கவுள்ளனர்.  எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து சூரி தனது எக்ஸ் தளத்தில் “எல்லையற்ற கடல் தன்னுள் முடிவில்லா ரகசியங்களை சுமக்கும்பொழுது, நெருப்பினால் மட்டுமே அதன் கதைகளை சொல்ல முடிகிறது” என்று குறிப்பிட்டு ‘மண்டாடி’ அறிவிப்பினை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பட தொடக்க அறிவிப்பு விழாவாக நடத்தப்பட்டது  இதுவரை பார்த்திராத  மீனவ பகுதியை சேர்ந்த முரட்டுத்தனமான. தோற்றம் கொண்டவராக சூரியின் புது  கெட்டப் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது
.
இப்படம் கடல், கடல் சார்ந்த மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு உருவாகிறது.
மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடல் பகுதியில் நடக்கும் நூற்றாண்டுகளாக நடந்து வரும்  மீனவ மக்களின் பாய்மர படகுபோட்டியை  மையமாக வைத்து உருவாகிறது. இது உண்மை நிகழ்வின் அடிப்படையில் போட்டி நடக்கும் கடல் பகுதியில் படப்பிடிப்பும் நடப்பது சிறப்பம்சம்.

இப்பட அறிவிப்பு விழாவில் இயக்குனர்
வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர் சூரி, இயக்குனர் மதிமாறன், இசை அமைப்பாளர் ஜிவி. பிரகாஷ்,  சுஹாஸ், மஹிமா நம்பியார், ரவீந்திர விஜய் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
விழா ஏற்பாடுகளை பி ஆர் ஒ ரேகா செய்திருந்தார்.

Related posts

கடைசி காதல் கதை: டிரஸ் போடலாமா , வேணாமா?

Jai Chandran

உலக AI மரபை தலைகீழாக மாற்றிய பெர்பெலக்சிட்டி (Perplexity)

Jai Chandran

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்துக்காக உருமாற்றம்: பிரபாஸ் ஓபன்டாக்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend