Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அஸ்திரம் (பட விமர்சனம்)

படம்: அஸ்திரம்

நடிப்பு: ஷாம், நிரா மற்றும் பலர்

தயாரிப்பு: தன சண்முகமணி

இசை: சுந்தர மூர்த்தி

ஒளிப்பதிவு: கல்யாண்

இயக்குனர்: அரவிந்த் ராஜகோபால்

பி ஆர் ஓ: A. ஜான்

நகரில் ஆங்காங்கே வாலிபர் சிலர் கத்தியால் வயிற்றை கிழித்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்
அந்த வழக்கை போலீஸ் அதிகாரி அகிலன் ( ஷாம்)  விசாரித்து மர்ம தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க பொறுப்பு ஏற்கிறார். இந்நிலையில் ஷாம் வீட்டிற்கு வரும் 2 வாலிபர்கள் திடீரென தற்கொலை செய்கின்றனர். அதைக்கண்டு அகிலன் அதிர்கிறார். தற்கொலை சம்பவங்களுக்கு பின்னணி என்ன? அகிலனால் அதை  கண்டுபிடிக்க முடிகிறதா? என்பதற்கு திருப்பங்களுடன் பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

ஆக்ஷன் ஹீரோ களம் என்றாலும்  நேரடியாக ஆக்ஷன் ஹீரோபோல் அதிரடியாக  ஷாம் இறங்காமல் காட்சிகளில் அண்டர்கரன்டாக ஆக்ஷன் வேகத்தை வைத்து தற்கொலை வழக்கை கண்டுபிடிக்க முயல்வது மாறுபட்ட அணுகுமுறை.   சீனுக்கு சீன் நடக்கும்  திருப்பங்களை  படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.

கிறிஸ்து மதத்தை சம்பவம் செய்வதுபோல் காட்சிகள் நகர்ந்தாலும் பின்னர் அதை  மத சாயத்துக்குள் நுழையாமல் விளையாட்டுப் பின்னணிக்கு மாற்றுவது புத்திசாலித்தனம்.

ஷாம் மனைவியாக வரும் நிரா சென்டிமென்ட்டுக்கு படன்பட்டிருக்கிறார்.

நிழல்கள் ரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தன சண்முகமணி தயாரித்திருக்கிறார்.

சுந்தர மூர்த்தி இசை ஒ கே.

கல்யாண் கேமரா கால வித்தியாசம் காட்டுகிறது.

இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் கிரைம் திரில்லருடன் மெஸ்மரிச கான்செப்ட்டை கலந்து. காட்சிகளை நம்பும்படி செய்திருக்கிறார்  சில சீன்களை ட்ரீம் செய்தால் படத்தின் வேகம் கூடும்.

அஸ்திரம் –  மயக்கும்.

 

Related posts

Yaanai – First single YelammaaYela hits 1.5 M+ Views

Jai Chandran

ரெய்டு (பட விமர்சனம்)

Jai Chandran

அல்லுவின் AA22xA6 படத்தின் அறிவிப்பு காணொளி. சாதனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend