Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ராஜா கிளி (பட விமர்சனம்)

படம்: ராஜ கிளி

நடிப்பு: சமுத்திரக்கனி, தம்பி ராமையா, தீபா, பிரவீன் குமார்,  டேனியல் அநி போப், பல கருப்பையா,  வெற்றி குமரன், அருள்தாஸ், ஸ்வேதா, கிங்காங்

தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி

இசை: சாய் தினேஷ்

ஒளிப்பதிவு: கேதர்நாத் கோபிநாத்

இயக்கம்: உமாபதி ராமையா

பிஆர்ஓ: ஜான். ஏ.

தொழில அதிபர் முருகப்பபா சென்ராயர் ( தம்பி ராமையா) சமூகத்தில் உயர்ந்த மதிப்புடன் இருந்த நிலையிலும் அவரை  மனைவி  சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறார். இந்நிலையில்  முருகப்பாவுக்கு,   வேலை கேட்டு வந்த பெண்ணுடனும், வாக்கிங் போகும் வழியில் ஒரு பெண்ணிடமும் பழக்கம் ஏற்பட்டு   அவர்களில் ஒருவரை  2ம் தாரமாக திருமணம் செய்து கொள்கிறார்.  ஒரு கட்டத்தில் இந்த பெண்கள் திசை மாறி செல்கின்றனர். இதனால கொலை வழக்கில் போலீஸ் பிடியில் சிக்கும் முருகப்பா  தண்டனை..பெற்று நடுத்தெருவில் பைத்தியம் போல் அலைகிறார். சமூக சேவகர் ஒருவர்  அவரை  காப்பாற்றி தனது காப்பகத்திலேயே தங்க வைக்கிறார்.  கோடீஸ்வரனாக வாழ்ந்த முருகப்பாவின் கதி என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.

50  வயது  கடந்த தம்பி ராமையா முருகப்பா கதாபாத்திரத்தில்.முருக பக்தராக வந்தாலும்k. காம  பித்தனாக மாறி இளசுகளே பொறாமை கொள்ளும் வகையில் மன்மத விளையாட்டு நடத்தி இருக்கிறார்.  இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று கேட்கும் அளவுக்கு அருவருப்பான சில ஆட்டங்களையும் போடுகிறார்..

3வது கல்யாணத்துக்கு குருஜி  பழ கருப்பையாவிடம் பர்மிஷன் வாங்க தம்பி ராமையா முயலும் போது, “இனிமேல் அந்த ஆள் வந்தால் உள்ளே விடாதே”  என்று பழ கருப்பையா கடுப்பு காட்டுவது . கலகலக்க வைக்கிறது.

கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்று பின்னர் தப்பித்து ஓடும் தம்பி ராமையா பைத்தியமாக மாறி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு  உருமாறுவதும், கம்பு ஊன்றி நொண்டி நொண்டி  நடந்து  செல்வதுமாக  மனதை நெருடுகிறார்.

சமுத்திரக்கனி ஒரு சமூக சேவகராக வருகிறார். படத்தில் இன்னும் நிறைய பேர் நடித்திருந்தாலும் அவர்களுக்கெல்லாம் பெரிதாக ஒன்றும் வேலை இல்லை.

சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்திருப்பதுடன் கிளைமாக்ஸ்  ஒரு வழக்கறிஞர் வேடத்திலும்  நடித்திருக்கிறார்.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா  படத்தை இயக்கி இருக்கிறார். தற்போதுள்ள  டிரெண்டுக்கான  படமாக இல்லாமல் ரத்தக்கண்ணீர் காலத்து கதையாக இயக்கியிருக்கிறார்.  பெண்ணாசை சொல்லும் என்ற ஒற்றை வார்த்தையை படமாக காட்டியிருக்கிறார்.  இது ஓட்டல் அதிபர் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்ட கதையாக தெரிகிறது

சாய் தினேஷ்  இசைக, கேதர்நாத் கோபிநாத் ஒளிப்பதிவு ஓகே.

ராஜா கிளி – வயதான காமக் கிளி.

 

 

 

 

 

 

 

Related posts

‘அஃகேனம்’ பட பாடல்- டிரெய்லர் வெளியீடு

Jai Chandran

வெங்கட் பிரபு தாயார் மறைவுக்கு சிலம்பரசன் இரங்கல்

Jai Chandran

Shruti Haasan’s next international project..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend